“உப்புமா – இட்டலி-என்ற பெயர் ஏன் வந்தது?
 
(சமய குருவை சமையல் துறையில் கொஞ்சூண்டு
ருசிக்கலாம் இப்போது ரா.கணபதியின் எழுத்தில்)
 
கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
.
 
‘உப்புமா’ என்ற பெயர் அந்த உண் வகைக்கு ஏன்
வந்தது என்று அந்த விநோத வித்தகர் கேள்வி
எழுப்புகிறார். எவராலும்’கன்வின்ஸிங்’காகக்
காரணம் சொல்ல இயலவில்லை.
 
அவரே சொல்கிறார்.
 
“அது uppuma இல்லே,ubbuma! ப (pa)-காரத்தை
ப (ba) காரமாச் சொல்லணும். ஒடச்ச மாவையோ,
ரவையையோ வென்னீர்ல கொட்டின ஒடனேயே
அது வாணலி பூரா உப்பிடறதோல்லியோ?
சாதம் வடிக்கறச்சேயுந்தான் அரிசி உப்பறது.
ஆனா அதுக்கு ரொம்ப நாழி ஆறது. நொய்யும்,
ரவையுமோ சட்னு பாத்ரம் பூரா உப்பிடறது.
அதனாலதான் ‘உப்புகிற மாவு’ங்கிற அர்த்தத்துல
அந்தப் பேர் ஏற்பட்டிருக்கு”
 
ஸ்ரீ சங்கர பாஷ்யத்தின் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்
இட்டிலி,இடியாப்பம் பற்றியும்,’இந்த லோக
வாழ்க்கையிலே இருக்கிற எதுவுமே தள்ளுபடி இல்லை’ என்ற அநுபவ நிலையில் ஆராய்ச்சி செய்து கூறியிருக்கிறார்.
 
“இட்டு இலி – அதாவது இலையிலே இட்ட உடனேயே அது இல்லாம ‘இலி’யாகச் சாப்பிடறவா வயித்துக்குப் போயிடறது; அத்தனை ஆர்வமா மநுஷனைச் சாப்பிட வைக்கிற பதார்த்தம் அதுன்னு ஒர்த்தர் சொன்னார்.ம்அது சமத்காரத்துல சொன்னது.
 
“வாஸ்தவத்திலே ‘இடுதல்’ங்கிறதுக்கு ஒண்ணைத் தொடாம அப்படியே வெச்சுட்டு இருந்துடறதுன்னு ஒரு அர்த்தம்ம்உண்டு. ‘இடுகாடு’ங்கிறோம்,அதுல ம்ருத சரீரத்தைச்ம்சிதையிலே அப்படியே வெச்சுட்டுத் திரும்பி வந்துடறதாம்இருக்கு. புடம் போடறதுக்காகத் தங்கத்தை நெருப்பிலேம் அப்படியேரொம்பநேரம் வெச்சிருப்பா.
அந்தத் தங்கத்துக்கு ‘இடு தங்கம்’னே பேர். ‘மருந்து வைக்கிறது’ன்னு சொல்லி வசிய மருந்தை ஒரே ஒரு தரம் குடுத்துட்டு,அப்புறம்ம்’டோஸ்’ இல்லாம விட்டுடுவா.அதுக்கும்’இடு மருந்து’ன்னே பேர்!
 
அதே ரீதியில, பாத்திரத்துக்குள்ளேயிருக்கிற
பதார்த்தத்தைக் கிண்டிண்டு,திருப்பி விட்டுண்டு இல்லாம அப்படியே ஸ்டீம்ல வெச்சு மூடிட்டு,அதுவே பக்குவகட்டும்னு பேசாம ஒக்காந்திருக்கிறதும் ‘இடுதல்’தான்.
 
அதை இடல்,இட்டல்னும் சொல்லலாம்.அந்த மாதிரி
தயார் பண்ணினதே ‘இட்டலி’.பேச்சுல ‘இட்டிலி ஆயிடுத்து.
 
“அதே போல ஸ்டீம்ல ‘இட்டது’தான், “இடுதல்’
செஞ்சதுதான்.ப்ராம்மணாள் ஸேவைன்னும் மத்தவா இடியாப்பம்னும் சொல்றது. அது அப்பம் மாதிரியில்லாமஎழை எழையாயிருக்கேன்னா, இது அப்பம் இல்லையே!
 
ஆப்பம்னா? ‘அப்’ என்கிற ஜலத்தின் ஸம்பந்தமுள்ளது. ‘ஆபம்’, அதுவே ‘ஆப்பம்’ ஆயிடுத்து. இடியாப்பம் நீராவியில தானே வேகறது
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...