பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்னைக்கான தீர்வு இது… இது ஒரு ரகசிய மந்திரமும் கூட!
இந்த மந்திரத்தைச் சொல்லி, பரிகார முறையைச் செய்து வந்தால் உடனடியாக உங்களுக்கு பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்.
தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகள் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் … அதாவது சுக்கிர ஹோரையில் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சைக் கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக் கூடாது. அவை முழு மொச்சைகளாகத் தெரிய வேண்டும்.
அவற்றை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு, சிறு முடிச்சாகக் கட்டிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கீழ்க்காணும் இந்த மந்திரத்தை ஆறு முறை பக்தியுட சொல்லி, மொச்சை முடிச்சை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும்.
இந்த பரிகார முறை, கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக முறை.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ