May 17, 2021, 3:48 am Monday
More

  மோக்ஷமளிக்கும் மாசி கருடஸேவை

  நம்பெருமாள் எல்லா பிரம்மோற்சவத்திலும் ஒருநாள் கருடஸேவையில் சேவை சாதித்தாலும், இந்த மாசி வெள்ளி கருடஸேவை

  maasi-garutan
  maasi-garutan
  • மாசி கருட சேவை ஸ்பெஷல் !
  • மாசி கருட சேவை இன்று….!
  • மோக்ஷமளிக்கும் கருட சேவை !

  மோக்ஷமளிக்கும் மாசி கருடஸேவை

  மஹாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளறையன், பக்ஷிராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன், வைகுண்டத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்யும் நித்யசூரி! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் இவரை பெரிய திருவடி என்றழைப்பர்!

  மனித முகத்துடனும், பெரிய மீசையுடனும், உடல் முழுதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து, ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும், மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில், இரு கரங்களையும் எம்பெருமானின் திருவடிகளை தாங்குவதற்காக நீட்டி, பெரிய அலகுகளுடன் தோன்றுவார்!

  நம்பெருமாள் எல்லா பிரம்மோற்சவத்திலும் ஒருநாள் கருடஸேவையில் சேவை சாதித்தாலும், இந்த மாசி வெள்ளி கருடஸேவை – காசி யாத்திரையிலும் புனிதமானது!!

  மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் வைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார்.

  மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.

  அனைத்து ஆழ்வார்களும் ( தன் ஆச்சாரியரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார் தவிர ) மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் திருவரங்கம் ஆகும். இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மா மண்டபத்தருகில் நடைபெறுகின்றது. பெருமாள் அன்று தங்க கருடனில் சேவை சாதிக்கின்றார். மேலும் தை, மாசி, பங்குனி மாத உற்சவங்களின் போதும் நம்பெருமாள் கருட சேவை தந்தருளுகிறார்.

  maasi-garutan-srirangam
  maasi-garutan-srirangam

  இவற்றுள் மாசி கருட சேவை மிகவும் சிறப்பு பெற்றது. மாசி கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பது வழக்கு அக்கருட சேவையை கண்டு மகிழுங்கள்.

  பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.9.10

  செருவாளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செய்யும் நாந்தக மென்னும்
  ஒருவாளன் * மறையாளன் ஓடாத படையாளன் விழுக்கை யாளன்*
  இரவாளன் பகலாளன் என்னையாளன் ஏழுலகப் பெரும்புர வாளன்*
  திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவ ரங்கமே

  தனியொருவராகப் போர் செய்யும் ஆற்றல் உடைய புள்ளினத் தலைவனான கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டவனும், இவ்வுலகை நடத்தி வருபவனும், நாந்தகம் என்னும் வலிமையுடைய வாளைக் கொண்டு தீயவர்களை அழிப்பவனும், வேதங்களை ஆளுகின்றவனும், என்றும் புறமுதுகைக் காட்டாத போர்ப்படையை வைத்துள்ளவனும் ,
  அடியார்களுக்கு அள்ளித்தரும் ஆழகிய திருக்கைகளை உடையவனும், இரவுபகல் ஆகியவற்றை தோற்றுவிப்பவனும், ஏழுலகை மட்டுமின்றி என்னையும் ஆள்கின்றவனும், திருமகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவனுமான
  பரந்தாமன் ஆனந்த மயமாக யோகநித்திரை செய்யும் இடம்
  திருவரங்கமாகும்…

  ரங்கா!!! ரங்கா!!! ரங்கா!!!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,243FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,195FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-