
இன்று ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரம். சுவாமி மணவாள மாமுநிகளின் முக்கிய 8 சீடர்களில் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவரான எறும்பியப்பா அவதரித்த திருநாள் இன்று ஆகும்.
சென்னைக்கு அருகேயுள்ள திவ்யதேசம் திருக்கடிகை (சோளிங்கர்). திருக்கடிகையில் (படம்) இருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்த கிராமம் எறும்பி. இப்போது இவ்விரு ஊர்களும் நகரமாக மாறி ஒன்றாகிவிட்டன.
எறும்பி கிராமம் திவ்ய தேசம் இல்லை. ஆனால், பரம பாகவதர்கள் எழுந்தருளி இருக்கும் இடம்தானே திவ்யதேசம்? அப்படிப்பட்ட ஊர் அது. வடதிருவரங்கம்க என இந்த ஊருக்கு சுவாமி மணவாள மாமுநிகள் பெயரிட்டார்.
வடதிருவரங்கத்தில் பிறந்தவர்கள், வாழ்பவர்கள் அத்தனை பேரும் அழகிய மணவாள தாசர்கள் எனப்படுவார்கள். அதாவது தம்முடைய சிஷ்யர்கள் ஆவார்கள் என்றும், மாமுநிகள் ஆசிர்வதித்தார்.
எந்த திவ்யதேசத்துக்கும், எந்த கிராமத்துக்கும் கிடைக்காத மாமுநிகளின் ஆசிர்வாதம் எறும்பிக்கு கிடைத்தது. இங்கு அவதரித்த சுவாமி எறும்பியப்பா மாமுநிகள் குறித்து 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்
