
இன்று கைசிக ஏகாதசி விழா சகல விஷ்ணு ஆலயங்களில் விமர்சையாக துவங்கி நடைபெற்றது.
பரம பாகவதரான நம்பாடுவான் தனது குலத்தால் கோயிலுக்குள் செல்ல முடியாதவர். தனது யாழின் துணை கொண்டு கைசிக பண் (பைரவி ராகம்) இசைத்து பெருமாளை மகிழ்விப்பவர். இவரது இசைக்கு மயங்கிய பெருமாள்
தனது கோயில் கொடிமரத்தையே ஓரமாக ஒதுக்கி வைத்தார். அதுபோல் நம்பாடுவானை உணவாக்கிக் கொள்ள இருந்த ராட்சதன், முற்பிறவியில் அந்தணனாகப் பிறந்தவன். சாபத்தின் விளைவால் ராட்சதனாக மாறினான். தன் ஸ்வரூபத்தை மறந்தான். பரம பாகவதராகிய நம்பாடுவானின் பார்வை பட்டதும் மனம் திருந்தினான். பெருமாள் கோயில் வாசலில் கைசிக புராணத்தை பாடியதால் கிடைத்த புண்ணியத்தை தருவதாக நம்பாடுவான் கூறியதும் ராட்சதனின் சாபம் விலகியது. மறுபடியும் அந்தணன் ஆனான். ஜாதியும், அந்தஸ்தும் வைணவத்தில் இல்லை.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயன பெருமாள் கோயில் ஆண்டாள் கோயில் உட்பட பல்வேறு விஷ்ணு கோயில்களில் விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.