கச்சத்தீவு விழாவில் பங்கேற்க தமிழக தந்தை சேர்ந்த 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது..
இலங்கையில் பிரபலமாக கொண்டாடப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச், 3, 4ல் நடக்க உள்ளது.
விழாவுக்கு தமிழக பக்தர்கள், 3,500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச், 3ல் விழா கொடி ஏற்றப்பட்டு அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும், மறுநாள் திருவிழா திருப்பலி பூஜையும் நடக்கிறது.
இவ்விழாவில், தமிழக பக்தர்கள், 3,500 பேரும், இலங்கை பக்தர்கள், 4,500 பேரும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.
மார்ச், 3ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகில், 3,500 பக்தர்கள் கச்சத்தீவு சென்று மறுநாள், திருவிழா முடிந்ததும் ராமேஸ்வரம் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.