More
    Homeஆன்மிகம்விழாக்கள் விசேஷங்கள்வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் நகரத்தார்கள்..

    To Read in other Indian Languages…

    வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் நகரத்தார்கள்..

    பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக சிங்கம்புணாி வழியாக அரோகரா கோஷத்துடன் பழனிக்கு புறப்பட்டன.

    சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி அரண்மனை பொங்கல், உள்ளிட்ட நகரத்தார்கள் 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க வைரவேல், சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசித்து காவடி செலுத்தி தங்கள் நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம்.அதன்பிறகு நடந்தே வீடு திரும்புவது அவர்களது தனிச்சிறப்பு. கால மாற்றத்திற்கேற்ப தங்களது பழக்கங்களை மாற்றாது தங்களது முன்னோர்கள் சென்ற பாதையில் இன்றும் மாறாது தங்களது பயணங்களை நகரத்தார்கள் தொடர்ந்து வருகின்றனர்.

    சுமார் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நகரத்தார் காவடி, கடந்த 29 ஆம் தேதி குன்றக்குடியில் இருந்து புறப்பட்டது. பாரம்பரிய வைரவேலுடன் 291 சர்க்கரை காவடிகள் மற்றும் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

    காவடிகள் குன்றக்குடி மையப் பகுதியாக வைத்து அங்கிருந்து புறப்பட்டு அரோகரா கோஷத்துடன் பழனி நோக்கி சென்றனா்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்த நகரத்தார்கள் காவடியுடன் பாதை யாத்திரையாக திருப்பத்தூர் சாலை வழியாக சிங்கம்புணரி நோக்கி வந்தனர். தொடர்ந்து அதிகாலை சிங்கம்புணரி நகருக்கு வருகை தந்த காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு வந்தடைந்தன. 291 காவடிகள் நகரத்தார்கள் காவடிகள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 130 காவடிகளை சேர்த்து இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது. திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள்.

    இந்த பாதயாத்திரை குழு பிப்ரவரி 4 ஆம் தேதி தை பூசம் தினத்தன்று பழனி சென்றடைந்து. அதன் பின் பிப்ரவரி 6 ஆம் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோவிலில் காவடி செலுத்திய பின் அவர்கள் நடந்தே வீடு திரும்புவார்கள். இந்த பயணம் மொத்தம் 19 நாட்கள் இருக்கும் என நகரத்தார் காவடி குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    7 + eighteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...

    Exit mobile version