Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்அஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்!

அஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்!

sringeri ambal sengottai mutt3
sringeri ambal sengottai mutt3

அன்பார்ந்த பக்தர்களே, இன்று நவராத்திரியில் அஷ்டமி எட்டாவது தினம். மிக முக்கியமான தினம். அன்னை துர்க்கையின் அருளை மேலும் பெருக்கிக் கொள்வதற்கு இன்று நாம் கூடியுள்ளோம்.

இந்த நன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம். அன்னை நிச்சயமாக அதை நிறைவேற்றுவார்.

தாயே துர்கா தேவியே, எங்களை எப்போதும் நல்ல வழியில் நடத்திச் செல்லம்மா.

தீமைகள் இல்லாத, துரோகங்கள் இல்லாத, நோய்கள் இல்லாத, சோம்பல் அற்ற, தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கையை எங்களுக்கு வழங்கு தாயே!

துர்க்கை அம்மா, எங்களது உற்றார் உறவினர் சொந்த பந்தம் எல்லோரும் ஆனந்தமாக இருப்பதற்கு அருள்வாய்!

தேவி ஆதிபராசக்தியே, எல்லா உயிர்களும் வாழ்வதற்கேற்ற நல்ல உணவும் நல்ல உணர்வும் கொண்டவர்களாக அவர்களை வைத்திரு தாயே.

ஜெய ஜெய துர்கா தேவி,
தைரியம், சுறுசுறுப்பு,
தன்னம்பிக்கை,
நற்சிந்தனை,
தாராளமனப்பான்மை,
உடல் நலம், நீள்ஆயுள்,
நற்செயல், ஆற்றல் தந்து
மனங்களில் மகிஷாசுரன் குடிபுகாதவாறு செய் தாயே.

இந்த கொரோனா காலத்தில் உலக மக்கள் மிகவும் சிரமப்பட்டு சிரமப்படுகிறார்கள். உங்களது பிள்ளைகளான எங்கள் மீது இரக்கம் கொண்டு கரோனா வைரஸ் என்ற நவீன மகிஷாசுரனை ஒழித்திடும்மா என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

எங்கள் நாடு செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும்.
எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு எங்கள் நாடு மேலும் சிறப்படைய வேண்டும்.

எல்லாரும் எல்லாமும் பெற அருள்வாய். இல்லாமை இல்லாத நிலை தந்தருள்வாய் தாயே.

உலக மக்கள் மனதில்

ஒற்றுமை நிலவ
அமைதி பரவ
மனித நேயம் மலர
ஒருவர்க்கு ஒருவர் உதவும் எண்ணம் வளர
உலகத்தின் நாயகியே
லோகாம்பிகையே
ஜகன்மாதாவே
அருள்வாய்!

  • ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
74FollowersFollow
74FollowersFollow
3,929FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த...

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த நடிகை ஊர்வி ஜாவித்..

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த பிரபல நடிகை ஊர்வி ஜாவித்திடம் ரசிகர்கள் பல...

Latest News : Read Now...