பிப்ரவரி 24, 2021, 6:45 மணி புதன்கிழமை
More

  ஸ்ரீராமனிடம் விண்ணப்பம்! “…ராம ராமேதி கர்ஜனம்!”

  Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஸ்ரீராமனிடம் விண்ணப்பம்! "…ராம ராமேதி கர்ஜனம்!"

  ஸ்ரீராமனிடம் விண்ணப்பம்! “…ராம ராமேதி கர்ஜனம்!”

  உலகெங்கும் உள்ள அனைத்து இந்துக்களும் இதில் பங்கு கொள்ளும்படி வேண்டுகிறோம்.

  srirama bathrachala
  srirama bathrachala

  ஸ்ரீராமனிடம் விண்ணப்பம்! ” …ராம ராமேதி கர்ஜனம்!”
  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
  தமிழில்: ராஜி ரகுநாதன்

  ஸ்ரீ ராமச்சந்திர பிரபு! எங்களை மன்னித்துவிடு! எங்களின் உதவியற்ற நிலையை மன்னித்துவிடு! நீயே உன் தர்மத்தையும் உன்னை நம்பியவர்களையும் காத்துக்கொள்!

  “ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்ஜனஸ்ய ச ரக்ஷிதா” என்று ராமாயணம் கூறுகிறதல்லவா?

  விடுதலைக்கு முன்பு நடந்த தாக்குதல்களின் சிதிலங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. சுதந்திர இந்தியாவில் நடக்கும் தாக்குதல்கள் மனக் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன.

  பிற மத சகிப்புத்தன்மையையும் சமரசத்தையும் இயல்பாகக் கொண்ட உன் சனாதன தர்மத்தின் மீதும் கோயில்கள் மீதும் பகிரங்கமாக நடக்கும் அழிவுக்கும் சிதைவுக்கும் நீயே முடிவு கட்ட வேண்டும்.

  இவை ஆவேசத்தோடு நடந்த தாக்குதல்கள் அல்ல. திட்டமிட்டு நடக்கும் அட்டூழியம்… அழிவுச்செயல். மதம் மாற்றும் மதங்கள் பல நிலைகளில் திட்டமிட்டு முன்னெடுத்து பரப்பும் விஷ வளையங்கள்.

  கொரோனாவைப் போலவே இந்த மதமாற்றம் மதக் கூட்டத்தாரின் வியூகங்களுக்குப் பல நிலைகள் உள்ளன.

  முதலாவது – ஆசைகாட்டி பலவீனங்களைப் பயன்படுத்தி தம் மதத்திற்குள் இழுப்பது.

  இரண்டாவது – ஹிந்து மத நூல்களையும் சம்பிரதாயங்களையும் பழித்துக் கூறி, திரித்து விளக்கமளித்து ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது.

  மூன்றாவது – எங்கெங்கிலும் தம் பிரார்த்தனை மையங்களை அமைத்து இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்து பிரச்சாரம் செய்வது.

  நான்காவது – ஹிந்து கோவில்களைத் தாக்கி விக்ரகங்களை உடைத்தாலும் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது.