ஏப்ரல் 20, 2021, 4:52 மணி செவ்வாய்க்கிழமை
More

  சிவபிரதோஷம் “ஆதி அந்த மூலன்”

  lord-shivaperuman
  lord-shivaperuman

  சிவபிரதோஷம்
  “ஆதி அந்த மூலன்”
  (மீ.விசுவநாதன்)

  சாதி மதங்கள் இல்லான்
  பஞ்ச பூத நல்லான்
  பாதி உமைக்குத் தந்தான்
  பரம ஞான வள்ளல் !
  நாதி நமக்கு என்றும்
  நமச்சி வாய மாக
  ஆதி அந்த மூலன்
  ஆட்சி செய்யு கின்றான் !

  தீமை நன்மை ரெண்டும்
  தெரிந்து வைத்துக் கொண்டு
  தீது செய்து விட்டால்
  தெருவில் பிச்சை ஏற்கும்
  சேதி சொன்ன காசி
  சிவனின் நியாயம் பேசும் !
  சோதி ரூபன் நாமம்
  சூது வாதை வெல்லும்!

  நீற ணிந்த பேர்க்கு
  நீரின் குமிழி வாழ்வைக்
  கூறும் கதையைக் காட்டி
  குற்றங் களையச் செய்வான் !
  ஆறு தலையில் கொண்டோன்
  அடியைப் பற்று வோர்க்கு
  ஆறு தலைய ளிக்கும்
  அம்மை அப்ப(ன்) ஆவான்.

  (இன்று (26.03. 2021 ) பிரதோஷம்)

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,118FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »