19/10/2019 8:17 PM
ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் வேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா? ஆராய்ந்தவர்களின் லட்சணம்?

வேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா? ஆராய்ந்தவர்களின் லட்சணம்?

-

- Advertisment -
- Advertisement -

சுப வீ செட்டியார் ஒரு பேட்டியில் சூத்ரன் என்று கூறி #சூத்ரன்_பாதத்தில் பிறந்ததாக வேதத்தில் உள்ளது என்று கூறி இந்து தர்மத்தை இகழ்ந்துள்ளார். பொதுவாக நம் பாரத நாட்டில் ஆங்கிலேய ஆட்சியில் மிஷனரி அமைப்புகள் தங்கள் கிருத்துவ மதத்தை பரப்ப மிகவும் தடையாக இருந்தது நமது இந்த வேதங்களே.

சாதாரணமாகவே நீ சொல்வது பெரிய வேதமா? என்று கூறும் பழமொழி உண்டு. அந்தளவிற்கு இந்து தர்மத்தின் அடிநாதமாக விளங்கியது வேதம். எனவே கிருத்துவ பாதிரிகள் அக்காலத்தில் அந்தணர்கள் போலவே வேடமிட்டு தங்கள் மதத்தை பரப்ப முயற்சித்தார்கள்.

அவ்வகையில் முக்கியமாக வேதத்தை எவ்வாறாவது சிறுமைப் படுத்த வேண்டும். அதன் பெருமைகளை சீர்குலைக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதன்படி மிஷனரி அமைப்புகள், பெரும் பணம் செலவு செய்து பலர் வேதத்தை மொழிபெயர்க்கிறோம், வேதத்திற்கு விளக்கம் எழுதுகிறோம் என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் விளக்கம் எழுதினார்கள்.

பெரிய அளவில் பணம் செலவு செய்து வேதத்தை மொழிபெயர்கிறோம், ஆராய் கிறோம் என்பது கண்டிப்பாக இந்து தர்மத்தை பாதுகாக்க அல்ல. நம் வேதத்தை சிறுமைப்படுத்தி மதம் மாற்றவே! எனவே ஆங்கிலேயன் வேதத்திற்கு எழுதிய விளக்கம் எவ்வாறு என்றால், சமீபத்தில் ஆண்டாளைப் பற்றி ஆராய்ச்சி செய்த அமெரிக்கன் விளக்கம் போன்றது.

வேதத்திற்கு விளக்கமோ, பொருளோ சொல்வது என்பது அவரவர் பக்குவத்தை பொருத்தது. அவ்வாறு இருக்கையில் வேதத்திற்கு ஆங்கிலேய மிஷனரி வாரிசுகள் விளக்கம் எழுதி மொழிபெயர்த்தார்கள். அந்த மொழிபெயர்ப்பு எவ்வாறு இந்து தர்மத்திற்க்கு ஆதரவாக இருக்கும்?! எனவே இந்துக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வகையில் வேதத்திற்கு விளக்கம் எழுதப்பட்டது.

அப்படி எழுதப்பட்ட விளக்கம்தான் புருஷ சூக்தம் என்ற வேதப்பகுதி விளக்கம். புருஷ சூக்தத்தில்,
“பிராம்மணோஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”- என்று உள்ளது.இந்த வரிகளுக்கு திராவிட  மிஷனரி வாதிகள் கொடுத்த விளக்கம் யாதெனில்,

இந்த.வேத புருஷனின் முகம் கழுத்து. தொடை, பாதம் போன்றவற்றில் இருந்து சாதி தோன்றியது .எனவே வேதம் சாதி ரீதியாக பிரிக்கின்றது என பிரச்சாரம் செய்தனர்.
இவ்வாறு பிரச்சாரம் செய்தால்தான் இந்து தர்மத்தை தாழ்த்த முடியும்.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் யாதெனில், பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு. பிராமணனுக்கு முகமே பலம். ஏனெனில் வேதம் ஓதும் பிராமணன் முக லட்சணத்தோடு விளங்க வேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும், நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை. எனவே பிராமணணுக்கு முக பலம் தேவை.

அது போல் க்ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பதும் தவறு. சத்திரியனுக்கு தோள் பலம் தேவை. ஏனெனில் சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும், வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை.

அதேபோல் வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பதும் தவறு. வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன். எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.

அதேபோல் சூத்திரன் காலில் பிறந்தான் என்பதும் தவறு. சூத்திரன் உழவு செய்பவன். உழவு செய்பபவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும். இவ்வாறு புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம் வேறு. கடந்த நூறு ஆண்டுகளில் திராவிட நாத்திகவாதிகள் செய்த வெறுப்பு பிரச்சாரம் வேறு.

பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை 1900 க்கு பின் வந்த அனைத்து நூல்களையும், முக்கியமாக வரலாற்று சமய நூல்களை படிக்கும்பொழுது அதில் திராவிட மிஷனரி மாயைகள், புரட்டு வரலாறுகள், இடைச் சொருகல்கள் உள்ளதா என்று ஆராய்ந்தே அந்நூலை ஏற்க வேண்டும்.. அங்கீகரிக்க வேண்டும்.

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: