திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் 1 அவதாரிகை 1 : திருப்பாவைக்கு ஆள் கிடையாது எம்பெருமானார் வார்த்தை ஈராயிரப்படி!  எம்பெருமானாரை திருப்பாவைக்கு பொருள் அருளிச்செய்ய வேணும் என்று விண்ணப்பிக்க,  திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும், திருப்பாவைக்கு ஆள் கிடையாது என்றார்.

இது எம்பெருமானார் வார்த்தை. அதாவது எம்பெருமானிடத்தில் பக்தி ப்ரேமம் மிகுந்தவர்கள் திருப்பல்லாண்டுக்கு அதிகாரிகள் என்ற படி.திருப்பல்லாண்டு எம்பெருமானுக்கு மங்களாஸாசனம், ஸ்ரீ பெரியாழ்வார் எம்பெருமானுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் மங்களாஸாசனபரர்.

இடைச்சிகள் பாவனை, ப்ரேமம் அவர்கள் இடைக்கை வலக்கை அறியா பக்தி ப்ரேமம் உடையவர்களே திருப்பாவைக்கு அதிகாரகள் என்றபடி. அதாவது பாகவத ப்ரேமம் மிகுந்திருக்கும் என்றபடி. இது கூடியிருந்து குளிர்ந்தேலோ என்றும், ஆறாம் பாட்டு முதல் பதினைந்தாம் பாட்டு வரை பல வகையான பாகவதர்களை ப்ரேமத்தை இட்டு விளிப்பதிலும் நோக்கலாம்.

பகவத் ப்ரேமம் மிகுந்தோர் கிடைத்தாலும் பாகவத ப்ரேமம் கிடைப்ப்து அரிது என்றபடி!

இப்படியாக, திருப்பாவை வ்யாக்கியானங்கள் அருளிச்செய்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை.. மூவாயிரப்படி, ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் நாயனார்.. ஆறாயிரப்படி, ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யார்.. ஈராயிரப்படி உரைகளில் நோக்கலாம் .

நம் பூர்வாசார்யர்கள் உரை இடுகையில், அவர்கள் காலத்திலோ அல்லது முற்பட்ட காலத்திலோ நடந்த நிகழ்வுகள், ஆசார்யர்களின் வார்த்தைகள் உரையாடல்கள் சம்பவங்கள் கொண்டு விளக்குவது, வ்யாக்கியானங்களில் காணக் கிடைக்கும்.

அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம். ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி திருப்பாவை வ்யாக்கியானங்கள் என்னும் ஸ்ரீகோசம் நமக்கு பேருபகாரம் பண்ணி அருளியதற்கு நம் நன்றிகள்.

  • வானமாமலை பத்மனாபன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...