கடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 10)

முடிவில் குடும்பத்தார் உண்டபின்பும் உணவு இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ! பாபாவின் பிரசாதம் பக்தர் வேண்டும் அனைத்தையும் அளிக்கும் சக்தி கொண்டது என்பது இன்றும் பலரின் வாழ்வில் நடந்து வருகிறது. நம்பினோர் கைவிடப்படுவதில்லை

சீரடி சாய் பாபா பகுதி 10 பாபா செய்த அற்புதங்கள்

இறைவன் தன் அடியார்களை காப்பதற்காகவும் அருட்செயல்களை நிகழ்த்துவதற்காகவும் பல நேரங்களில் இறங்கி வருகிறார். சில நேரங்களில் அடியவர்கள் மூலமும் தான் நினைத்ததை நிறைவேற்றி இறை உணர்வை வளர்கிறான் அத்துடன் தான் செய்யவேண்டிய செயல்களை சில மனிதர்களையும் பொருட்களையும் கொண்டு நிகழ்த்துகிறான் புனிதநீர் அக்ஷதை போன்றவற்றின் மூலம் நிறைவேற்றிய நிகழ்வுகள் ஆயிரமாயிரம் நம் புராண இதிகாசங்களில் உள்ளன.

அவ்வகையில் இதிகாசங்களில் அட்சதை மூலமாகவும் ராமானுஜர் புனித நீர் மூலமாகவும் செய்த அற்புதங்கள் அனைவரும் அறிந்ததே திருஞானசம்பந்தர் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நோயால் பாதிக்கப்பட்ட போது திருநீற்றுப்பதிகம் பாடி திருநீறு பூசி மன்னரின் நோயை குணப்படுத்தினார். ஞானசம்பந்தர் பாடிய பாடல் மூலம் திருநீற்றின் பெருமை உணர்த்தப்படுகிறது. திருநீரால் அடைய முடியாதது எதுவும் இல்லை என்பதை இப்பாடல் மூலம் ஞானசம்பந்தர் உறுதியாகக் கூறுகிறார்.

காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் நூலில் ஸ்நானம் என்பது நீரால் குளிப்பது மட்டுமல்ல, திருநீறு பூசுவதும் நீராடுதல் என்று கூறுகிறார். இத்தகைய சிறப்பு மிக்க திருநீறு மூலம் பாபா செய்த அற்புதங்கள் ஏராளம் அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் காண்போம். தாம் வாழ்ந்த இடத்தில் துவாரகாமாயி என்னும் யாக குண்டத்தை ஏற்படுத்திய பின்பு, தன்னை தரிசித்துச் செல்லும் பக்தர்களுக்கு உதியை ( யாக குண்டத்தில் இருந்து கிடைக்கும் சாம்பலை) பிரசாதமாக கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார். பக்தர்களுக்கு பலவகையில் பெரும் உதவியாக இருந்தது. பல சிக்கலான நேரங்களில் சர்வரோக நிவாரணியாகவும் பயன்பட்டது.

சில நேரங்களில் உதியை சிலரிடம் கொடுத்து ப்பிட்டவரிடம் கொண்டு குறிப்பிட்டவரிட ம் சேர்க்குமாறு கூறுவார். அவ்வுதியானது அந்நபரின் வாழ்க்கையை மாற்று வதும் உண்டு. ஒருமுறை ஷீரடியில் சில நாட்களாக தங்கியிருந்த ராம்கி புகா என்பவர் கண்டியில் உள்ள தன் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டார் ஏனெனில் சீரடியில் வந்து தங்கி செல்பவர்கள் யாராக இருந்தாலும் பாபாவின் அனுமதி கிடைத்தால் மட்டுமே செல்வர். காரணம் அனுமதி பெறாமலும் தடையை மீறியும் செல்பவர்கள் பல நேரங்களில் ஏதாவது ஒரு புதிய சிக்கலில் சிக்கிக் கொள்வார்.

அனுமதி தந்த பாபா கூடவே ஓர் பொட்டலத்தையும் எழுதப்பட்ட ஆரத்தி பாடல் ஒன்றையும் ஆசீர்வதித்து ஜான் தேரில் வசிக்கும் கிராம முன்சீப்பிடம் நான் கொடுத்ததாக கொடுக்கும்படி கூறினார் .ஆனால் ramki rupa பாபாவிடம் கூறினார், நான் இதற்கு முன் அங்கு சென்றது இல்லை அத்துடன் அங்கு சென்று விட்டு என் இருப்பிடம் செல்வதற்கு வேண்டிய பணமும் இல்லை என்றார் .

பாபா நீ அவ்விடம் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தானே நடக்கும் கவலையின்றி செல் என்று கூறினார். பாபாவின் சக்தியை அறிந்த ராம்கி பாபா உதியையும் ஆரத்தி பாடல் பிரதியையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டார். ராம்கி ஷீரடியில் இருந்து புறப்பட்டு ரயில் மூலம் ஜான் ஜானி அருகிலிருந்த ஜஸ்ட் எனும் நிலையை அடைந்தார். ரயில் நிலையத்தை அடைந்த ராம்கிர் பதட்டத்துடனே இருந்தார் காரணம் இரவு இரண்டுமணி யாரும் இல்லை, அத்துடன் அங்கிருந்து எப்படி போவது என்று அவருக்குத் தெரியாது சற்று நேரத்தில் ஒரு குதிரை வண்டிக்காரன் ஷீரடியில் இருந்து வந்திருக்கும் நபர் யார் என்று உரக்க கத்தினான்.

பெரும் நிம்மதி அடைந்த ராம் தானே ஷீரடியில் இருந்து வருபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவனுடன் குதிரை வண்டியில் பயணித்
தார். குதிரையோட்டி முதலாளி கொடுத்ததாக கூறி உணவும் கொடுத்தான். விடியும் சமயத்தில் ஊரை அடைந்தனர். ஊர் எல்லையை அடைந்தவுடன் வண்டிக்காரன் காலைக்கடன்களை கழிப்பதற்கு இறங்கி சற்று தூரம் சென்று விட்டான்.

ராம்கிர் இறங்கி சற்று தூரம் சென்று திரும்பி வந்து பார்த்தபோது குதிரை வண்டியும் குதிரைக்கா ரனையும் காணாமல் திகைத்தார். ஆனால் அவரின் உடைமைகள் கீழே இருப்பதை கண்டு ஆச்சரியமும் அடைந்தார். சற்று சுதாரித்துக் கொண்டு ராம் அருகில் சென் ரவர்களிட ம் கிராம முன்சீப் வீடு எங்கே என கேட்டார். அவர்களும் மிக அருகில் இருந்த வீட்டைக் காட்டினார்கள். வீட்டை அடைந்தபோது வீட்டில் எல்லோரும் பதட்டத்துடன் இருந்தார்கள் காரணம் சந்தோர்கரின் பெண் மூன்று நாட்களாக பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.

மருத்துவர்கள் கூட கைவிட்டு விட்டதால் பெரும் துக்கத்தில் அவர்கள் இருந்தார்கள். அதனால் ராம்கிரை விசாரிக்காமல் உதியை வாங்கி அவர்களிடம் கொடுத்து நீரில் கரைத்து கொடுத்துவிட்டு பாடலையும் பாடும்படி கூறினார் சாந்தோர்கர். ஷீரடியில் இருந்து பாபா அனுப்பி உள்ளார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தார். அத்துடன் பிரசாதமும் வந்திருப்பதால் காப்பாற்றப்பட்டு விடு வாள் என்று மேலும் மகிழ்ந்தார். அவர் கூறியபடியே செய்தார் சற்று நேரத்தில் சுகப்பிரசவம் ஆனது,

கொஞ்சம் சூழ்நிலை மாறியதால் ராம்கிர் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தாங்கள் குதிரை வண்டியையும் அனுப்பியதற்கு மிகவும் நன்றி என்று கூறினார். இதை கேட்டு வியந்த சாந்தோர்கர் தன்னிடம் குறிப்பிட்ட பணியாள ரோ குதிரை வண்டியோ இல்லை என்றும் , ஷீரடி யிலிருந்து தாங்கள் வருவது கூட தெரியாது என்று கூறினார்.

இவை யாவும் சாய்பாபாவின் செயலே என்பதை உணர்ந்து இருவரும் மேலும் பாபாவின் பெருமையை பேசி ஆனந்தமடைந்தனர். பின்னர் பாபாவிற்கு நன்றி செலுத்திய சந்தோர்கர் ராம்கி ரூபாவிற்கும் உரிய மரியாதைகள் செய்து அனுப்பினார்.

ஒருநாள் இரவு வழக்கம்போல் பாபாவிற்கு சேவை செய்து கொண்டிருந்தார் ஷா மா. அப்போது ஷாமாவின் சகோதரர் பாபாஜி மிக பதட்ட த்துடன் வந்தார். தன் மனைவி கடுமையான ஜுரத்தாலும் வயிற்றிலுள்ள கட்டியா லும் அவதிப்படுவதாகவும் அதிலிருந்து தன் மனைவியை மீட்டுத் தரும்படியும் பாபாவின் காலில் விழுந்து வணங்கி கேட்டார்.

இதனால் பதட்டமடைந்த சாமா தான் சென்று பார்த்து வருவதாகவும் கூறினார். ஆனால் இந்த இரவு நேரத்தில் நீ செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக உதியை சகோதரரிடம் கொடுத்து அனுப்பவும் என்று கூறினார் . மேலும் நாளை காலை சென்று பார்த்துவிட்டு உடனே திரும்பும்படியும் கூறினார்.

பாபாவின் தாசனாக இருந்த ஷாமா அவ்வாறே செய்தார் .இரவு நேரத்தில் இரண்டு மூன்று முறை உதியை கரைத்து குடிக்கும் படியும் கட்டியில் உதியை பூசுமாரும் ஆலோசனை கூறி அனுப்பினார்.

பாபாவின் மீது பெரும் நம்பிக்கை இருந்ததால் தன் வீட்டிற்கு சென்று கூறியபடியே செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஜுரம் குறைந்ததுடன் கட்டியும் கரைந்துவிட்டது நன்கு தூங்கி எழுந்த பாபாஜியின் மனைவி வழக்கம் போல் காலை பணிகளை துவங்கிவிட்டார். இதனை கண்டு ஆச்சரியமடைந்தார் வி டிந்த சற்று நேரத்தில் ஷாமா அண்ணன் வீட்டிற்கு வந்தபோது பாபாஜியின் மனைவி தேநீர் தயாரித்துக் கொடுத்தாள்.

பாபாவின் சக்தியை எண்ணி மகிழ்ந்த ஷாமா சகோதரரின் மனைவி தயாரித்த தேநீரை மகிழ்வுடன் பருகியபின் பாபா விடம் வந்தார். டாக்டர் பிள்ளை என்பவர் பாபாவின் நெருங்கிய அடியவர்களில் ஒருவர் அவரை பாபா சகோதரர் போல நடத்துவார். அவருக்கு நரம்பு சிலந்தி நோய் வந்து மிகவும் அவதிப்பட்டார் காலில் பெரிதாக கட்டி ஒன்றும் இருந்தது.இதனால் மிகவும் வருந்தினார்

வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டவர் சாகேப் மூலம் செய்தி அனுப்பினார் .தயவு செய்து என் மீது கருணை வையுங்கள் எனது ஊழ்வினை காரணமாகவே எனக்கு பெரும் நோய் வந்துள்ளது .எனது ஊழ்வினையை இனிவரும் 10 ஜென்மங்களில் தீர்க்கும்படி மாற்றி அமையுங்கள் காகா சாகேப் செய்தியை கேட்ட பாபா , நான் இருக்கும்போது அவன் ஏன் கவலை கொள்ள வேண்டும் பத்து நாளில் நான் தீர்த்து வைக்கிறேன் அவனை இங்கே கொண்டு வாருங்கள் என்றார்.

பாபாவின் ஆணை உடனே நிறைவேற்றப்பட்டு பிள்ளை கொண்டுவரப்பட்டார். பாபாவின் அருகில் கால் நீட்டி உட்கார்ந்த பிள்ளையை அன்புடன் நோக்கிய பாபா பிள்ளையை நோக்கி கூறினார் முன்வினை களை அனுபவித்தே தீரவேண்டும் ஆயின் அதன் தொல்லை சற்று குறைக்கலாம் என்றார் மேலும் இப்போது ஒரு காக்கை வரும் வந்து உன்னை கொத்தி உன் நோயை குணமாக்கும் கவலை கொள்ளாதே என்றார்

அப்போது பாபாவின் நெருங்கிய அடியவரான முஸ்லிம் பக்தர் அப்துல் வந்தார் இவர் பாபாவின் தேவைகள் பலவற்றை செய்து வந்தார். பாபாவை போன்று பிச்சை எடுத்து உண்டு வந்தார் .அத்துடன் நாள்தோறும் பாபாவின் முன் அமர்ந்து குர்ஆன் ஓதி வந்தார் துவாரகா மாயி உள்ள விளக்குகளை சுத்தம் செய்து விளக்கேற்றி யும் பணியை மேற்கொண்டிருந்த அப்துல் கால் நீட்டி அமர்ந்திருந்தத பிள்ளையை கவனிக்காமல் வந்தார்

அப்துல் சரியாக பிள்ளையின் கட்டி யில் கால் வைத்து மிதித்து விட்டார் .இதனால் கட்டி உடைந்து சீழ் இரத்தம் போன்றவை வெளிவந்தன .அதனால் பெரிதும் துன்புற்ற டாக்டர் பிள்ளை பெரும் துன்பத்தில் பலவாறு புலம்பினார் சற்று நேரத்தில் வலி குறைய ஆரம்பித்தது பிள்ளை வரவில்லையே என்றா ர் நீ கவனிக்கவில்லையா அப்துல் தான் காக்கை இனி அவன் வரமாட்டான் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள்! தினந்தோறும் இவ்வி பூதியை பூசி வா என்றார்.

சில நாளில் பாபா கூறியபடியே பிள்ளையின் நோய் குணமடைந்தது பாபாவின் உதி செய்யும் மாயங்கள் அளவே இல்லை. பாபாவின் உதி நோய்களை மட்டும் குணம் செய்யவில்லை எத்தனையோ பேருக்கு உணவளித்தது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! பா லாஜியின் வீட்டில் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது பாலாஜி பாஸ்கர் என்பவர் பாபாவின் அடியவர்கள் ஒருவர் பாபா நடந்து வரும் பாதைகளை சுத்தம் செய்யும் பணியையும் செய்து வந்தார்

தனது வயலில் விளையும் கோதுமை முழுவதையும் பாபாவின் முன் கொண்டுவந்து வைத்து விடுவார் பாபா ஏற்றுக் கொண்டது போக மீதம் இருப்பதை தனது தேவைக்காக வீட்டிற்கு எடுத்துச் செல்வார்.

அவ்வழக்கப்படி இன்றும் துவாரகாமாயீயில் ஒரு மூட்டை கோதுமை வைக்கப்பட்டு வருடாவருடம் மாற்றப்படுகிறது ஒருமுறை பாலாஜி வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்வின் போது அதிகப்படியான விருந்தினர்கள் வந்துவிட்டார்கள். இதனால் பயந்த பாலாஜியின் மனைவி உடனடியாக உணவு தயாரிக்க முடியாது விருந்தினர்களுக்கு உணவு பரிமாற முடியாது தவித்தார்.

அவள் தவிப்பை உணர்ந்த அவள் மாமியார் இது நமக்கு ஏற்பட்ட சோதனை அல்ல நம்முடைய உணவுமில்லை பாபாவினுடையது நீ எல்லா உணவு பாத்திரத்திலும் சிறிது ப உதியை போட்டு விட்டு பாத்திரத்தை மூடி முழுவதையும் திறக்காமல் பாதி திறந்தபடியே உணவிடு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார் அதன்படியே பாலாஜியின் மனைவியும் செய்தார்.

முடிவில் குடும்பத்தார் உண்டபின்பும் உணவு இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ! பாபாவின் பிரசாதம் பக்தர் வேண்டும் அனைத்தையும் அளிக்கும் சக்தி கொண்டது என்பது இன்றும் பலரின் வாழ்வில் நடந்து வருகிறது. நம்பினோர் கைவிடப்படுவதில்லை

  • எழுத்து: குச்சனூர் கோவிந்தராஜன்
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...