spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கால பைரவர்... கையில் கபாலம்!

கால பைரவர்… கையில் கபாலம்!

- Advertisement -

காலபைரவர் …..   சிவபெருமானின் அம்சம் … காசி என்கிற இறைவர்கள் முனிவர்கள் தொடர்ந்து வாசம் செய்யும் நகரின் எல்லை புரத்தை காவல் செய்யும் இறைவன் .. இவரின் வழிபாடு சமண மற்றும் புத்தர்க்களாலும் கைகொள்ளப்படுகிறது .

இரவில் பயணம் செய்கிறவர்கள் , நீண்ட புனிதப் பயணம் மேற்கொள்கிரவர்கள் மற்றும் பாரத தேசம் தாண்டி தொலைதேசங்களில் வாழ்கிறவர்களை காக்கும் தெய்வமாக இவரை போற்றுகிறார்கள்

இவருக்கு இரவில் விளக்கு ஏற்றி முந்திரி அமுதுசெய்ய ..நம் வாழ்வில் ஏற்படும் பல வித பயங்கள் நீங்கும் .. (வேலை பயம் , படிப்பு பயம் , கடன் அடைக்க முடியாமல் போகுமோ என்கிற பயம் … லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கு எல்லாருக்கும்!)

இவரது அருகில் நாய்கள் இருக்கும் .. மனிதர்கள் நாய்க்கு உணவிட்டால் இவர் திருப்தி பெற்று உங்களது பயத்தை போக்குவார் … மேலும் இவரை பற்றி அறிய… https://www.speakingtree.in/blog/kala-bhairava-the-lord-of-time

இவரது கையில் ஒரு கபாலம் (scull as a begging bowl) இது பிரும்மாவின் ஐந்தாவது தலை என்று சொல்லுவது ஏன் ??

இதை எதோ இறைவர்களுக்குள் நடந்த சண்டை .. ஆணவம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள் அதை சித்தாந்த புறமாக காணுவோம்

கால பைரவர் கையில் கபாலம்!

மனிதன் உடலில் இன்றைய விஞ்ஞான மருத்துவம் வெற்றி கொள்ளாத .. பாகம் நமது மூளை .. இதில் நியூரான்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் தொகுப்புகள் (how the combined neurons in the brain cells ..behave and why and how they communicate is still not known) பலவித ரசாயன மற்றும் மின்சார கடத்திகள் போல செயல்பட்டு அவற்றின் முழுமையான செயல் பாடுகளை நம்மால் அறிய முடியாமல் இருக்கிறது .. (பல ஆராய்சிகள் ஒரு அனுமானமே!!)

உடலில் 14 நாடிகள் உள்ளன அதில் மூன்று நாடிகள் உள்ளன என்று நேற்றைய படத்தில் பார்த்தோம் .. (இதில் முக்கிய புள்ளிகளே ஆறு ஆதர சக்கரங்கள் என்று குண்டலனி யோகத்தில் கூறுகிறார்கள் .. அவற்றை நீங்கள் தனியாக அறிந்து கொள்ளுங்கள் .. நேரம் கருதி அதை விடுகிறேன் )

மனிதர்களுக்கு மூலையில் இரண்டு தனி தனி பாகங்களாக உள்ளன என்பதை அறிந்து இருப்பீர்கள் ..இவை உடலின் தனி தனியாக இரு பகுதியாக கண்காணிக்கின்றன ..

நாடி … இதில் உடலின் இடப்பகுதியில் செயல்படும் நாடி இட நாடி … பிங்கல நாடி என்பது வலது புறம் செயல்படுவது ..

இதன் சக்தியே மனிதனின் பல வித ஆசைகளை எண்ணங்களை மனதில் கொண்டு வந்து சேர்க்கின்றன ..(உங்களுக்கும் எனக்கும் தோன்றாத பல கொடூர எண்ணங்கள் .. சூப்பர் ஐடியா இவை எல்லாம் அடுத்தவனுக்கு தோன்றுவதற்கு காரணம் இந்த நாடியின் செயல்பாடுகளே

மூன்றாவதாக சொல்லப்படும் சுஷும்னா நாடி .. இது உங்கள் மூலாதாரம் (இது சிறுநீர் துவாரம் மல துவாரம் நடுவில் மெல்லிய தொல்லினால் அமைக்கப்பட்டு இருக்கும் இடம் .. ) முதல் கபால உச்சி வரை இருக்கும் ..

இந்த உச்சி பிறந்த குழந்தைக்கு கபாலத்தில் ஒரு ஓட்டை போல திறந்து இருக்கும் ..

இந்த மாதிரி கபாலம் உச்சியில் எலும்பு இல்லாமல் இருக்கும் குழந்தைக்கு பூர்வ ஜென்ம வாசனை இருக்கும் .. நீங்க யாரு நான் யாரு என்கிற பல விசயங்கள் தெரியும் .. என்ன motor sensory nerves மூலையில் வளராத படியால் அதனால் அதை முகத்தில் வெளிக்காட்ட முடியாது .. சிரிக்கும் அழும் கண்களில் மகிழ்வை காட்டும்..

வளர வளர எலும்புகளால் மறைக்கப்படும் கெட்டியாக ஆகிவிடும் .இதை தான் சட வாயு என்று சொல்லுகிறார்கள் . உங்களை யார் என்று மறைக்கும் செயல்

கர்னாடக 100 வயசு சுவாமிகள் வீடியோ பதிவிட்டு அவருக்கு அது திறந்தே இருப்பதை சுட்டி இருந்தேன் !!

கீழே காணும் படத்தில் .. இட பிங்கலை நாடிகள் மூளையின் இரு பகுதிகளிலும் சுழண்டு நம்மை இந்த உலக ஆசைகளில் உழல வைக்கும் ..

சுஷும்னா நாடி நேரே சென்று மூளையின் இரண்டு பகுதிக்கும் மேலே சென்று மண்டையின் நடுப்பகுதிக்கு செல்லும் ..

“உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.”

இது சிவா வாக்கியர் சொன்ன விசயம் … !

விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe