spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஆன்மிகப் புரட்சி செய்து... அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

- Advertisement -

athivarathar deeparatha1அத்திவரதர் வைபவம் இனிதே நிறைவுற்றது. நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒப்புயர்வற்ற திருவிழா இது என்பதில் ஐயமில்லை.. காஞ்சீபுர வாஸிகளான நமக்குப் பெருமையும் கர்வமும் தகும் !

48 நாட்கள் ! ஒரு கோடி மக்கள் ! நம் அனைவரின் இல்லங்களிலும் தொடர்ச்சியாக உறவினர்களும் விருந்தாளிகளும் என நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எந்நாளும் மறக்கவியலாத / மறக்கக் கூடாத ஒரு சிறந்த நிகழ்வாக அத்திவரதர் வைபவம் பதிவானதை மறுப்பாரில்லை !

செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், ஃபேஸ்புக் முக்கியமாக நாத்திகர்களின் நாக்கு என எங்கும் அத்திவரதரே வியாபித்திருந்தார் !

ஆன்மிகப் புரட்சி ! ஒரு மண்டலப் புரட்சி !

athivarathar alankaramசெயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.

மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்துறை & திருக் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இயன்றவளவில், நிறைவாகவே ( சில குறைகளை மறுப்பதற்கில்லை ) வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

கோயிலினுள்ளே, பக்தர்களுக்குப் பெருமாள், தாயார் தரிசனம் முற்றிலுமாக தடை செய்யப் பட்டி ருந்தது சோசநீயமே!

ஆயினும் உள்ளுறையும் தெய்வங்களுக்கு, க்ரமமாக திருவாரா தனம், தளிகை & அருளிச் செயல் கைங்கர்யங்கள் தங்குதடையின்றி, 48 நாள்களும் இரண்டு வேளைகளிலும் நடைபெற்றதைத் தவறாமல் குறிப்பிடத் தான் வேண்டும் !

கோடை உத்ஸவம், திருவாடிப்பூர உத்ஸவம், ஆனி ஆடி கருடோத்ஸவங்கள், முக்கியமாக ஆனியிலும் ஆடியிலும் வரும் பெரியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் & ஆளவந்தார் சாற்றுமறைகள் ( இத்தனை பெரிய அத்திவரதர் வைபவத்திலும் ) மிகச் சிறப்பாக, எவ்வித இடையூறுகளுமின்றி நடைபெற்றதை ஶ்லாகித்தே ஆகவேண்டும்.

ஆழ்வாராசாரியர்கள் சாற்றுமறைகள் திருக்கோயில் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அநுஸரித்து, எந்தவிதமான சண்டை சச்சரவுகளுக்கும் மனக்கசப்புகளுக்கும் இடங்கொடாத வகையில், சிறப்பாக ( எப்போதும் நடக்கிற வகையிலேயே ) நடத்தப்பட்டதற்கு திருக்கோயில் நிர்வாகத்திற்கும் ( நிர்வாக அதிகாரி ), மணியகாரர் ஸ்வாமிக்கும், அந்தரங்க (உள்துறை) கைங்கர்யபரர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும் !

அத்தி(கிரி) வரதர் என்றென்றும் நம்மைக் காப்பாராக!!

  • அக்காரக்கனி ஸ்ரீநிதி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe