கோகுலாஷ்டமியா? ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியா..?! எதைக் கொண்டாடுவது?

இந்த முறை ஆகஸ்ட் 23ம் தேதி கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 24ம் தேதி ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி

ஏன் க்ருஷ்ணனுக்கு இரண்டு பிறந்தநாள் ?!? கொண்டாடவேண்டும்? ஸ்ரீகிருஷ்ணன் மதுராவில்… துவாபர யுகத்தில்அவதரித்தது… அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்)… ரோஹிணி நக்ஷத்திரத்தில்…அப்போது இரண்டும் ஒரே நாள்…ஒரே சமயம்‼

கண்ணன் பிறந்த திதியான அஷ்டமியை கோகுலத்து ஜனங்கள் கொண்டாடினர்… அதனால் கோகுலாஷ்டமி அல்லது ஜன்மாஷ்டமி என்றாயிற்று…!

கண்ணன் பிறந்த நாளான அஷ்டமி திதியும், ரோஹிணி நக்ஷத்திரமும் பல சமயங்களில் வெவ்வேறு நாளில் வரும். சில வருஷங்கள் ஒரே நாளில் வரும்…

*பல சம்பிரதாயங்களிலும் இன்றும் கண்ணன் அவதரித்த அஷ்டமி திதியைத் தான் கொண்டாடுவார்கள். அதனால் ஆகஸ்ட் 23, 2019 அன்று கோகுலாஷ்டமி…*

இந்த வருடம் மதுரா, த்வாரகா, போன்ற இடங்களில் ஆகஸ்ட் 24 அன்று தான் ஜன்மாஷ்டமி கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பகவான் அவதரித்த நக்ஷத்திரமே முக்கியம். அதனால் ஆவணி ரோஹிணி வரும் அன்றே ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடுவார்கள். அது இந்த வருடம் ஆகஸ்ட் 24, 2019 அன்று கொண்டாடப்படுகிறது. அதிலும் வைகானசம், பாஞ்சராத்திரம், முனித்திரயம் என்றும் மாறுபடும். இந்த வருடம் ஸ்ரீவைஷ்ணவவர்களிலும் 23ம் தேதி கொண்டாடுபவர் உண்டு

சரி… நாம் எதைக் கொண்டாடவேண்டும் ?!?

நீங்கள் உங்கள் சம்பிரதாய முறைப்படி இரண்டு தினங்களில் ஏதேனும் ஒரு நாளைக் கொண்டாடலாம் …

என்னுடைய அபிப்ராயம்… இரண்டையுமே கொண்டாடலாம்..!

மனிதருக்கே ஆங்கில பிறந்த நாள், நக்ஷத்திர பிறந்த நாள் என்று இரண்டு கொண்டாடும்போது, நாம் நம் கண்ணனின் இரண்டு பிறந்தநாளைக் கொண்டாடி ஆனந்தத்தில் திளைக்கலாமே…

– குருஜி கோபாலவல்லி தாசர் (Guruji Gopalavallidasar)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...