தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக இந்த ஆண்டு வேளாங்கண்ணி சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ளது.
இச்சுற்றுலா இன்று முதல் 8.9.2019 வரை சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களை தாம்பரத்திலிருந்தும் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு புறப்பட்டு, காலை தமிழ்நாடு ஓட்டல் திருக்கடையூரில் காலை உணவு வழங்கப்படும். அதன்பின், காலை 10 மணிக்கு வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்றடையும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் பேராலய வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், இரவு 8 மணிக்கு வேளாங்கண்ணி பேராலயத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை வந்தடைவார்கள்.
இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 2100 மற்றும் சிறியவர்களுக்கு (6–12 வயது) ரூ.1050 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சுற்றுலாவிற்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை–2, தொலைபேசி: 04425333333/25333444/25333857/25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.tamilnadutourism.org, இணையதள முன்பதிவு: www.ttdconline.com, கைபேசி முன்பதிவு: www.mttdonline.com