spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்குறைவற்ற இன்பமய வாழ்க்கைக்கு... ‘பித்ரு தர்ப்பணம்’ முக்கியம்!

குறைவற்ற இன்பமய வாழ்க்கைக்கு… ‘பித்ரு தர்ப்பணம்’ முக்கியம்!

- Advertisement -

பித்ரு தர்ப்பணங்களில் மிக மிக உயர்ந்தது! உங்களுக்கு இன்று வரையிலும் ஒரு குறையும் இல்லை என்றால், நீங்கள் இதுவரையிலும் மாதம் தோறும் உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறீர்கள் என்று தான் அர்த்தம்!

உங்களுக்கு குறையும்,ஏக்கமும்,விரக்தியும்,வெறுப்புமே வாழ்க்கையாக இன்று வரையிலும் இருந்தால்,நீங்கள் இன்று வரையிலும் ஒரே ஒரு முறையாவது பித்ரு தர்ப்பணம் செய்திருக்கிறீர்களா என்பதை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்

நாடு முழுவதும் தெய்வபக்தி தழைத்திருந்தால்,குடும்பங்கள் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டு இருக்கும்;குடும்பங்கள் சுபிட்சமாக வாழ்ந்து வருகின்றது என்றால்,ஒவ்வொரு குடும்பத்தாரும் மாதம் தோறும் முன்னோர்களுக்காக பித்ரு தர்ப்பணம் செய்து வருகின்றார்கள் என்று தானே அர்த்தம்?

ராமாயணம் நடைபெற்று 17,50,000 ஆண்டுகள் ஆகின்றன;அன்று முதல் 1750 வரையிலும் சுமாராக 2,00,000 தலைமுறைகளாக பித்ரு தர்ப்பணம் செய்து வந்தது நமது தமிழ்ப் பரம்பரை! கிறிஸ்தவ ஆங்கிலேய ஆதிக்கம், இங்கே இருக்கும் செல்வ வளத்தைக் கொள்ளையடித்தது; மீண்டும் இந்த நாடு எந்த விதத்திலும் முன்னேறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது!

தமிழ்ப் பண்பாட்டின் ஆணிவேர்களாக இருந்த கோமாதா என்ற பசு,விவசாயம்,பெண் இனம்,கோவிலும் கோவிலைச் சார்ந்த பொருளாதாரத்தையும் சிதைக்கும் வேலையை கிறிஸ்தவ ஆங்கிலேயன் ஆரம்பித்தான்;இதன் விளைவாக உலகத்தின் முதன்மை வல்லரசாகவும்,6,00,000 கிராமங்களும் தன்னிறைவு பெற்ற சிறு தன்னாட்சி குடியரசுகளாகவும் (அக்காலத்தைய உள்ளாட்சி) இருந்த நிலை படிப்படியாக மாறத் துவங்கியது;

எப்படி மாறியது ? என்பதை அறிந்து கொள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தை பாருங்கள்;அதில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும் முழு உண்மையே!!! லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் நமது நாட்டின் இழிநிலையை அப்படியே வெளிப்படுத்தி இருக்கின்றது;

சுதந்திரம் அடைந்த பின்னரும்,இந்த நாட்டின் அடிப்படை ஆதாரமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதும், தமிழ் நாட்டின் மக்களின் பக்தி வளமே இந்த நாட்டிற்கு ஆன்மீக பலத்தைத் தருகின்றது என்பதை உணர்ந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் அதை தகர்க்க சில அடிமைகளை உருவாக்கினான்!

அந்த அடிமைகளால் 1964 முதல் 2018 வரையிலான கால கட்டத்தில் பக்தியை இழந்தோம்;ஆன்மீக வளத்தை இழந்தோம்;கூட்டுக் குடும்ப அமைப்பு சிதையத் துவங்கியது;தனிக் குடும்பங்களும் நிம்மதியின்றி வாழ இயலாமல்,குடும்ப அமைப்பே சிதையத் துவங்கி விட்டது;

இலவசங்களை நம்பி வாழும் இழிநிலைக்கு ஆளானோம்; அதனால்,இன்று யாரும் கடவுளையும் நம்புவதில்லை; தீய சக்திகளான மாந்திரீகத்தையும் நம்புவதில்லை; குறுக்கு வழிகளில் உலகத்தையே கட்டுப்படுத்தும் அதர்வண வேதத்தையும் நம்புவதில்லை!

ஆனால், இந்த ஆன்மீக வழிமுறைகளையும்,அதர்வண வேதத்தின் டெக்னிக்குகளையும் மேற்கு நாடுகள் பயன்படுத்தி, நம்மை இப்போது அடிமைப்படுத்தி வருகின்றன!

நாமோ இப்போது தான் அவர்களுடைய தந்திரங்களை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றோம்; ஆனால்,மொத்த மக்கள் தொகை அளவுக்கு பார்க்கும் போது போதுமான அளவுக்கு தேசபக்தியுடன் கூடிய தெய்வ பக்தி இன்னும் பரவவில்லை என்றே தெரிகின்றது!

இனிமேலும் வெறும் தெய்வபக்தியுடன் மட்டும் வாழ்ந்து வந்தால், 2030க்குப் பிறகு கோவிலுக்குச் செல்லவே யார் யாரிடமோ அனுமதி பெறும் இழிநிலை உருவாகி விடும்; எனவே,உங்கள் வாரிசுகளுக்கு தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்தியை (12 வயது முதல் 22 வயதுக்குள்) ஊட்டுங்கள்!

ராமாயண காலத்தில் ராமபிரான் வனவாசம் 14 ஆண்டுகள் சென்றார்; அப்போது மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் செய்திருக்கின்றார்; அப்படி பித்ரு தர்ப்பணத்தினை பித்ருக்கள் உலகத்தில் இருந்து தசரத மஹாராஜாவே நேரில் வந்து பெற்றிருக்கின்றார்!

தற்போதும் கூட,கலியுகாதி 5121 ஆம் ஆண்டில் கூட ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் பித்ரு தர்ப்பணம் சில குறிப்பிட்ட இடங்களில் செய்யும் போது அவர்களுடைய முன்னோர்கள் நேரில் வந்து தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்!

1600 வரை தினசரி பித்ரு தர்ப்பணம் செய்து வந்தோம்;1800 வரும் போது, கிறிஸ்தவ ஆங்கிலேயனின் சுரண்டலால் ஆண்டுக்கு 12 முறை (மாதம் ஒரு முறை = அமாவாசை அன்று மட்டும்) தர்ப்பணம் செய்தால் போதும் என்று சம்பிரதாயம் மாறியது; காரணம் செல்வ வளத்தை இழந்த நமது ஆன்மீக பூமி, வறுமையுள்ள குடும்பங்களை உருவாக்கிக் கொண்டு இருந்தது!

1950 வரும் போது ஆண்டுக்கு 3 முறை மட்டும் பித்ரு தர்ப்பணம் செய்தால் போதும் என்ற இழிநிலையை கலியுகம் தோற்றுவித்துவிட்டது; ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று மூன்றே மூன்று முறை பித்ரு தர்ப்பணம் செய்தால் போதும் என்றாகி விட்டது!

1990 வரும் போது ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்தாலே போதும்; சென்ற 12 ஆண்டுகளாக செய்யாமல் விடுபட்ட பித்ரு தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று சுருங்கி விட்டது; அதனாலேயே 99.99% மக்கள் தினசரி வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சாதனை என்று ஆகிப் போனது!

சித்தர்களின் அருளால் இப்போது ஒரு உண்மை கிடைத்திருக் கின்றது! தை முதல் நாள் அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் கடந்த 70 ஆண்டுகளாக (சுமாராக 2 அல்லது 3 தலைமுறை) செய்யாமல் விடுபட்ட குறைகளை நீக்கும் சக்தி வாய்ந்தது என்று சித்தர் பெருமக்கள் உபதேசம் செய்துள்ளார்கள்!

இன்றைய அனைத்து விதமான தனி மனித ஏக்கங்கள், பிரச்னைகள் வளர்ந்து கொண்டே செல்வதற்குக் காரணம் பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பது தான்!

உங்கள் வீடு அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான கோவில் குளக்கரை/நதிக்கரை/கடலோரம் பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள்:அனைத்து குறைகளும் நீங்கி சுபிட்சமாக வாழ்க வளமுடன்!!!

  • சமூக வலைத்தள வைரல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe