spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று (04.06.2020) வைகாசி- விசாகம் - ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!

இன்று (04.06.2020) வைகாசி- விசாகம் – ஸ்வாமி நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்!

- Advertisement -
nammazhwar ramanujar
nammazhwar ramanujar

திருநெல்வேலி, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குறுகூர் (ஆழ்வார் திருநகரி) என்ற ஊரில் அவதரித்தார் ஸ்வாமி நம்மாழ்வார்!

பிறந்தது முதல் உலக இயற்கைக்கு மாறாக இவர் இருந்ததால் இவரை மாறன் என்றழைத்தனர்!

மாயையை உருவாக்கும் சட எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் இவர் அதையும் வென்றதால் சடகோபன் என அழைக்கப்பட்டார்!

யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் பராங்குசன் என்றும் அழைக்கலானார்!

nammazvar800x566 e1523155698797
nammazvar800x566 e1523155698797

இவர் நான்கு வேதங்களையும் தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் எனறு போற்றப்பட்டார்!

பதினாறு ஆண்டுகள் திருக்குறுகூர் நம்பி கோவிலின் புளியமரப் பொந்தில் எவ்வித சலனமுமின்றி இருந்தவரை, இவ்வுலகிற்கு காட்டி, அவர் மூலம் நாலாயிர திவ்யபிரபந்தமும் வெளிக்கொணர்ந்தது மதுரகவி ஆழ்வார்!

நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள்:
திருவிருத்தம் (100)
திருவாசிரியம் (7)
பெரிய திருவந்தாதி (87)
திருவாய்மொழி (1102)

மொத்தம் 1296 பாசுரங்கள் மூலம் எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் அனுபவித்து, நம்மையும் உய்வடைய செய்தவர் ஸ்வாமி நம்மாழ்வார்!

“உண்டோ வைகாசி விசாகத்திற்கு ஒப்பொருநாள்;
உண்டோ சடகோபர்க் கொப்பொருவர்;
உண்டோ திருவாய்மொழிக் கொப்பு;
தென்குருகைக்கு உண்டோ ஒருபார் தனிலொக்குமோர்!

– மணவாள மாமுனிகள் (உபதேச ரத்தினமாலை)

வைகாசி விசாகத்திற்கு நிகரான ஒரு திருநாள் உண்டோ, என்றால் இல்லை!

நம்மாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ, என்றால் இல்லை!
இவர் அருளிய திருவாய்மொழிக்கு ஈடான பிரபந்தம் உண்டோ, என்றால் இல்லை!

இப்பூமண்டலத்தில் நம்மாழ்வார் அவதரித்த திருநகரிக்கு இணையான ஒரு திவ்யதேசம் உண்டோ, என்றால் இல்லை!
– என்று மணவாள மாமுனிகள் நம்மாழ்வாரை போற்றுகிறார்!!

1 COMMENT

  1. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். வைகாசி விசாகக் கட்டுரை பயனுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe