பிப்ரவரி 24, 2021, 7:18 மணி புதன்கிழமை
More

  புதுக்கோட்டையில் ஆருத்ரா தரிசனம்! பக்தர்கள் பங்கேற்பு!

  Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் புதுக்கோட்டையில் ஆருத்ரா தரிசனம்! பக்தர்கள் பங்கேற்பு!

  புதுக்கோட்டையில் ஆருத்ரா தரிசனம்! பக்தர்கள் பங்கேற்பு!

  சாந்தநாத சுவாமி திருக்கோவிலில், வேட்டைப்பெருமாள் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி

  pudukottai-santhananda-swamigal-arudhra-darshan1a
  pudukottai-santhananda-swamigal-arudhra-darshan1a

  புதுக்கோட்டை   சாந்தநாத சுவாமி  திருக்கோவிலில்,  வேட்டைப்பெருமாள் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  புதுக்கோட்டை  சாந்தநாத சுவாமி  திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை யொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பழங்கள்,  இளநீர், சந்தனம் விபூதி, அரிசி மாவு, மஞ்சள் , திரவியம்,  உள்ளிட்ட  அபிஷேகங்கள் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும்  செய்யப்பட்டன.

  pudukottai-santhananda-swamigal-arudhra-darshan
  pudukottai-santhananda-swamigal-arudhra-darshan

  பின்னர்  நடராஜர் வெள்ளி  அங்கி மலர் அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

  இதேபோன்று பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள வேட்டைப் பெருமாள் கோவிலில் மார்கழி மாத திருவாதிரையொட்டி சிறப்பு ருத்ரஹோமம் சந்தோஷ் சாஸ்திரிகள்  தலைமையில்  நடைபெற்றது