இலங்கை சபரிமலை யாத்ரீகர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை

இலங்கையிலிருந்து சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களை சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அழைத்து வந்து இந்து மக்கள் கட்சி சார்பில் பாதபூஜை நடத்தப்பட்டது. இலங்கை வவுனியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக 40 பக்தர்கள் சபரிமலை வந்து கொண்டிருந்தனர். கடலூரில் அவர்களை வரவேற்ற இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று பாத பூஜை செய்தார்.

நடராஜரை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பக்தர்கள், இலங்கையில் இருந்து இன்னும் ஏராளமான பக்தர்கள் இந்தியா வர ஆவலாக இருப்பதாகக் கூறினர். எனவே இலங்கை – தமிழகம் இடையிலான கப்பல் போக்குவரத்தினை தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இலங்கையில் இருந்து ஆன்மீக யாத்திரையாக _ சபரிமலை நோக்கி பயணமாக தமிழகம் வந்தடைந்த இலங்கை வவுனியா அய்யப்ப பக்தர்களுக்கு கடலூர் மற்றும் சிதம்பரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

இது குறித்து ராம.ரவிக்குமார் கூறியதாவது:

இலங்கை வவுனியா பகுதியில் இருந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டு தமிழகம் வருகை 34 ஆண்கள் – 4தாய்மார்கள் உட்பட 38 பேர் நேற்று 6.1 .2017 விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை இந்து மக்கள் கட்சி இளைஞரணி செயலாளர் தாம்பரம் சீனிவாசன் தலைமையில் சிறப்பாக வரவேற்று கடலூர் அனுப்பி வைத்தனர் .

கடலூர் வருகை தந்த சிவனடியார்களை மாவட்ட எல்லையில் இளைஞரணி மாநில செயலாளர் கடலூர் NR பரணீதரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் வரவேற்றனர்.
இரவு வழிபாடு முடித்து அன்னதானம் நடைபெற்றது.

இன்று புலர்காலை 7 மணிக்கு கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாட லீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் – வழிபாடு முடித்து சிதம்பரம் பயணித்தோம். காவல்துறை புடைசூழ சிதம்பரம் சென்றடைந்த அனைவரையும் சிவனடியார்கள் இந்து இயக்க பிரமுகர்கள் நமது நிர்வாகிகள் – அய்யப்ப தீட்சிதர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கிழக்கு கோபுரம் முன்பு அனைத்து இலங்கை சைவர்களுக்கும் பாத பூசை செய்து – மலர் தூவி – பொன்னாடை அணிவித்து அடியேன் அழைத்து சென்றேன். தில்லை நடராசர் சன்னதி முன்பு இலங்கை இந்து சைவர்கள் வருகையை தீட்சிதர்களிடம் கூறிய வுடன் தாய் உள்ளத் தோடு தீட்சிதர் பெருமக்கள் அனைத்து மக்களுக்கும் பிரார்த்தனை செய்து இரு நாட்டு உறவுகள் ஆன்மீக ரீதியான தொடர்புகள் வலுப்பெற வேண்டும் – இலங்கை மக்கள் அடிக்கடி சிதம்பரம் வாருங்கள். கப்பல் மூலம் வருகை தரும் இலங்கை சைவர்களை வரவேற்க தயாராக உள்ளோம் என்றனர்.

அய்யப்ப ேஜாதி கண்ட உணர்வு சிதம்பரம் நடராஜர் தரிசனம் என்று ஆனந்தமாக கூறினர். அது மட்டுமல்லாது ஆடி_ ஆவணி மாதம் இலங்கையில் கதிர்காமம் முருகன் – நல்லூர் முருகன் கோவில் விழாவுக்கு கப்பல் மூலம் காங்கேசன்துறைக்கு வாருங்கள் என இலங்கை சைவ தமிழர் கள் வேண்டு கோள் விடுத்தது இரு நாட்டு உறவை மேலும் உறுதிப்படுத்தியது.

ஆன்மீக ரீதியான தொடர்புகள் வலுப்பெற்றால் தான் அரசியல் உறவு பலப்படும் .இதற்கு ஆன்மீக அரசியல் ஒரு வழியாக – தீர்வாக அமைய நடராச பெருமானை பிரார்த்தித்து இலங்கை இந்து சைவர்களை சீர்காழி – வைத்தீஸ்வரன் கோவில், பயணப்பட வழியனுப்பிவைத்தோம்.