“பெரியவாளின் தியாகம்” சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒரு வனப் பிரதேசத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.
பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு, மூன்று ஆந்திர
வைதீகர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஸ்நானம்,
ஸந்த்யை,தேவதார்ச்சனம்- எல்லாம் இனிமேல் தான்.
அவர்கள் சுயம்பாகிகள். தாங்களே சமைத்துச்
சாப்பிடுவார்கள்.
ஆனால், அந்த முகாமில், அதற்கெல்லாம் வசதியில்லை.
“சரி, போய் நித்யகர்மாக்களை முடித்து விட்டு வாருங்கள்”
என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள், பெரியவா.
சிஷ்யர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
சிரமசாத்யமான ஒரு காரியத்தைச் சொல்லி
விடுவார்களோ?என்று, உள்ளூர அச்சம்,கவலை.
அரைமணிக்குப் பின் அவர்கள் வந்து
நமஸ்காரம் செய்தார்கள்.
“உங்களுக்கெல்லாம் சரியானபடி போஜனம் செய்விக்க
வசதிப்படவில்லை. உப்புசப்பில்லாத என் பிக்ஷா
பக்குவங்களை உங்களுக்குக் கொடுக்கச்
சொல்லியிருக்கிறேன்”.என்றார்கள் , பெரியவா.
சிஷ்யர்களுக்கு அதிர்ச்சி- பெரியவா பிக்ஷக்காக
செய்யப்பட்டவைகளை இவர்களுக்குக் கொடுத்து விட்டால்,
பெரியவாளுக்கு என்ன பிக்ஷை?
“இன்று சம்பாசஷ்டி, நான் சாப்பிடக் கூடாது.
பால் மட்டும் போதும்..” என்று சிஷ்யர்களுக்கு சமாதானம்.
பெரியவாளின் தியாகத்தைக் கண்டு, சிஷ்யர்களின்
கண்களில் நீர் துளித்தது.