
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஜன 11 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. கோயில்களில் மாதந்தோறும் இரண்டு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட கோயில்களில், சனி மகா பிரதோஷ ம் மாலை ,4 மணிக்கு நடைபெறுகிறது.
இதை ஒட்டி, கோயில்கள் அமைந்துள்ள நந்திகேஸ்வரன் , சிவபெருமான் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும். இதை அடுத்து, சிவ பெருமான் அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் .
இதே போல சனி மகா பிரதோஷம் முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் பக்தர்கள் நடத்தப்படுகிறது. அடுத்து கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.
மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமான கருதப்படும் பிரளயநாத சிவன் ஆலயத்தில், ஜன.11.ம் தேதி சனிக்கிழமை மாலை 4.15..மணிக்கு சனிமஹா பிரதோஷம் அபிஷேகம், பூஜகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, பள்ளித் தாளாளர் எம். மருதுபாண்டியன், கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, கவுன்சிலர் வள்ளி, கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் திருக்கோவில், சித்தி விநாயகர் கோவில், வரசித்தி விநாயகர், மதுரை பாண்டி கோவில் ஜெ. ஜெ.நகர், வரசக்தி விநாயகர் கோவில், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர், யாருக்குதான் முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில், சனி மகா பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ,கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் பிரதோஷ விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.