- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது மளிகைபுறம் மஞ்சமாதாவுக்கு உற்சவம் நடத்தப் படுகின்றன.

சபரிமலை ஐயப்பனுக்கு மகரஜோதி விழா முடிந்ததும் கடந்த ஜன 15முதல் பிரசித்தி பெற்ற 18 படி பூஜை நடந்து வருகிறது. இன்று நடந்த படி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பூஜைகளும், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட ஏராளமான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

இதில் படிபூஜைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜை கட்டணமாக ரூ.61 ஆயிரத்து 800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக கட்டணத்தில் நடத்தப்படும் படி பூஜைக்கு வருகிற 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்து உள்ளது. இதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு 2029-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது. இந்த இரு பூஜைகளும் நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் ஐய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாத பூஜை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த இரு பூஜைகளும் நடத்தப்படும்.

ALSO READ:  சிறப்புத் தகவல்: ஐயப்பனின் ஐந்து படை வீடுகள்; மண்டல பூஜைகள் தொடக்கம்!

படி பூஜையையொட்டி 18 படிகளையும் கழுவி சுத்தம் செய்து, பட்டு விரித்து, பூக்களால் அலங்காரம் செய்து, 18 படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி தந்திரி தலைமையில் படி பூஜை நடத்தப்படும்.

உதயாஸ்தமன பூஜையையொட்டி காலையில் நடை திறப்பு முதல் இரவு நடை அடைப்பு வரை 18 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி ஒவ்வொரு முறையும் நடை திறந்து உதயாஸ்தமன பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதைக் கருத்தில் கொண்டு இந்த 2 பூஜைகளும் மாத பூஜை நாட்களில் நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மகரஜோதி முடிந்ததால் தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு காலையில் உதயாஸ்தமன பூஜை, இரவு படி பூஜை நடந்து வருகிறது.

சபரிமலையில் ஜன.19 இரவு பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும் நிலையில் இன்று நடந்த படி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ALSO READ:  பிரயாக்ராஜில் களைகட்டிய மகாகும்பமேளா; முதல் நாள் காலையிலேயே 60 லட்சம் பேர் புனித நீராடல்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version