- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மஹா கணபதி ஆலயம்., 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 51 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

முன்னதாக, சிவாச்சாரியார்கள் கணபதி யாக பூஜையுடன் துவங்கி மூன்று கால யாக பூஜைகள் செய்து உருவேற்றி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, தீயணைப்புத்துறை வாகனம் மூலம் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் கணபதி சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை செய்து சிறப்பு அலங்காரத்தில் பூஜை செய்தனர் இந்த கும்பாபிஷேக விழாவிற்கு, உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

ALSO READ:  மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டி கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயில் அமைந்துள்ள கலசத்தில்சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கலசத்திற்கு கொண்டு சென்று கும்பத்தில் ஊற்றினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படது. விழாவிற்கான ஏற்பாடுகளை, 66.எம் உசிலம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version