- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மாசிப் பெருந் திருவிழா தேரோட்டம்!

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மாசிப் பெருந் திருவிழா தேரோட்டம்!

சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் கோவில் மாசி திருவிழா - பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்!

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப் பெருந் திருவிழா திருத்தேரோட்ட வைபவம் கோலாகலம்! பக்தர்கள்
ஏராளமானோர் சுவாமி தரிசனம்!

மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்ரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை எதிர்கொண்டு அழைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாகளில் ஒன்றான மாசிப்பெருந்திருவிழா கடந்த 3 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா துவங்கியதையடுத்து சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், விழாவின் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் நேற்று (10ம் தேதி) நடைபெற்றதன் தொடர்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ALSO READ:  சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மைதருவார் மற்றும் பிரியாவிடையுடன் தேரில் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் மாசி வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

தேரோட்ட விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலிலும் நின்று
சுவாமியை வரவேற்று தரிசனம் செய்தனர்.


சோழவந்தான் பேட்டை வீரமாகாளியம்மன் கோவில் மாசி திருவிழா – பொங்கல் வைத்து நேர்த்திக்கடன்!

சோழவந்தான் பேட்டை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் முதல் நாள் திருவிழாவான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

கோவில் முன்பு பொங்கல் வைத்து ஏராளமான பெண்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பேட்டை கிராமத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version