ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷத்துடன் திருவரங்கன் சித்திரைத் தேர் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் அணிந்த பட்டு, மாலை மற்றும் கிளியுடன் கூடிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டது. அரங்கநாதருக்கு ஆண்டாள் பட்டு சாற்றப்பட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் அணிந்த பட்டு, மாலை மற்றும் கிளியுடன் கூடிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டது. அரங்கநாதருக்கு ஆண்டாள் பட்டு சாற்றப்பட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன் பின்னர், சித்திரை தேரோட்டம் காலையில் கோலாகலமாகத் தொடங்கியது.  திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரங்கனை தரிசித்து மகிழ்ந்தனர்.

இன்றைய தேர் திருவிழா மிக அதிக அளவிலான மக்கள் வெள்ளத்தில் திணறியது . தேர் இழுக்கப்படும் வடம் மிக நிறைவான நீளம் கொண்டதாக நிறைய பேர் இழுக்கக்கூடியதாக அமைந்திருந்ததால், தேர் மிக விரைவாக நிலை சேர்ந்தது.