மதுரையில் திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் இன்று உள்ளிருப்புப் போராட்டம்

சமீபத்தில் திருக்கோயில் பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், திருக்கோயில் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். பணிக்கொடை அனைத்துத் தரப்பினருக்கும் விரைவில் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பெருந்திரள் முறையீடு ஆகிய போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதன்கிழமை திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இன்று காலை முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அதே நேரத்தில் போராட்ட காலத்தில் கோயில் கால பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகளிலும் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.