29-01-2023 4:33 AM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது

    To Read in other Indian Languages…

    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது

    12 Aug10 Nelliyaper kovil - Dhinasari Tamilநெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருவிழாவான வருகிற 14-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் நெல்லை டவுன் ரதவீதிகளில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    வருகிற 19-ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலை சென்றடைகிறார். வருகிற 20-ந் தேதி இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர் சந்திரசேகரராகவும், காந்திமதி அம்பாள் பவனி அம்பாளாகவும் சப்பரத்தில் பாண்டியராஜா, தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய கலயநாயனார், சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி ரஸ்தாவை கடந்து மானூர் சென்றடைகிறார்கள்.

    21-ந் தேதி மானூரில் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிகள் அங்கு இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்தடைகிறார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four + twenty =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,058FansLike
    386FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,373FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

    விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

    RRR பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப்’ விருது; பிரதமர் மோடி வாழ்த்து !

    தமிழ் திரைப்படத்துறை இதிலிருந்து நல்ல பாடம் கற்கவேண்டும் என்று தேசபக்த திரை நட்சத்திரங்களிடமிருந்து குரல் எழுந்து வருகிறது.

    Latest News : Read Now...