திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் கொடிப்பட்டம் கோவிலில் இருந்து வீதி உலா சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மந்திரங்கள் முழங்க ஆவணித் திருவிழாவுக்கான கொடி கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.