மாளயபக்ஷம் என்ற மகாளயபட்சம்… என்ன செய்ய வேண்டும்?! ஓர் எளிய விளக்கம்

மாளயபக்ஷம் ( மகாளயபட்சம் ) - விளக்கம் : மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.. பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள்

மாளயபக்ஷம் ( மகாளயபட்சம் ) – விளக்கம் : மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.. பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் ( சில சமயம் 16ஆக மாறுபடும் ) நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும் .

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும்.
தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவாசை.
மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ( அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுத்த பலன் வந்து சேரும்.

மகாளயபட்ச காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் :

மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் ( திவசம் ) செய்வோம்.
ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும்.

அந்தணர்களுக்கு வஸ்திரதானம் ஏழைகளுக்கு அன்னதானம்
படிக்க சிரமப்படும் ( பொருளாதார நிலையில் ) மாணவர்களுக்கு வித்யாதானம்

இவைகளை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்களின் மூதாதையர்கள் ( முன்னோர்கள் ) மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் ( பித்ருக்கள் ) பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க வேண்டும்.

தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்களின் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும்.

அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம் ; ஸ்ரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம் :

( மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் )

முதல் நாள் : பிரதமை திதி – பணம் சேரும்

இரண்டாம் நாள் : துவிதியை திதி – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்

மூன்றாம் நாள் : திரிதியை திதி – நினைத்தது நிறைவேறும்

நான்காம் நாள் : சதுர்த்தி திதி – பகை விலகும்

ஐந்தாம் நாள் : பஞ்சமி திதி – வீடு நிலம் சொத்து வாங்கும் யோகம் கூடும்

ஆறாம் நாள் : ஷஷ்டி திதி – புகழ் கிடைக்கும்

ஏழாம் நாள் : ஸப்தமி திதி – சிறந்த பதவி கிடைக்கும்

எட்டாம் நாள் : அஷ்டமி திதி – அறிவு ஞானம் கிடைக்கும்

ஒன்பதாம் நாள் : நவமி திதி – சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கும்

பத்தாம் நாள் : தசமி திதி – நீண்டநாள் ஆசை நிறைவேறும்

பதினோராம் நாள் : ஏகாதசி திதி – படிப்பு கலை வளரும்

பனிரென்டாம் நாள் : துவாதசி திதி – தங்க ஆபரணங்கள் சேரும்

பதிமூன்றாம் நாள் : திரயோதசி திதி – தீர்க்காயுள் ஆரோக்யம் தொழில் அபிவிருத்தி கிடைத்தல்

பதினான்காம் நாள் : சதுர்த்தசி திதி – பாவம் நீங்கி எதிர்கால தலைமுறைக்கு நன்மை

பதினைந்தாம் நாள் : மகாளயஅமாவாசை – மேலே சொன்ன அத்தனை பலன்களும் நம்மை வந்து சேர நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்

மகாளயபட்ச விதிமுறைகள் :

குறிப்பு : மகாளயபட்ச ( மேலே சொன்ன 15 தினங்கள் ) காலத்தில்
கண்டிப்பாக வெங்காயம் சேர்க்க கூடாது
எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது
முகச்சவரம் செய்யக்கூடாது
தாம்பத்யம் ( உடலுறவு )கூடாது
புலனடக்கம் மிக மிக அவசியம்
மகாளயபட்சத்து ( பதினைந்து நாட்களில் ) தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது ( மஹாளய பக்ஷ விபரம் )

(செப்டம்பர்)
25.செ _ ப்ரதமை
26.பு _ த்விதீயை
27.வி _ த்ருதீயை
28.வெ _ சதுர்த்தி (மஹாபரணீ)
29. சனி_பஞ்சமி
30. ஞா _ ஷஷ்டி (கபில ஷஷ்டி)
(அக்டோபர்)
01.தி_ ஸப்தமி (மஹாவ்யதீபாதம்)
02.செ_ அஷ்டமி(மத்யாஷ்டமீ)
03.பு_ நவமி(அவிதவா நவமீ)
04.வி _ தஶமி
05.வெ_ஏகாதசி
06.ச_ த்வாதஶீ & த்ரயோதஶீ (கஜச்சாயை)
07.ஞா_ சதுர்தஶீ
(ஶஸ்த்ரஹதபித்ரு நிதி)
*08.தி _ மஹாளய அமாவாஸை

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.