ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோவிலான, கோவை முந்தி விநாயகர் ஆலயத்தில், அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்து, விநாயகரை தரிசித்து, வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில், முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் ஆன தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ள, 19 அடி உயரமான விநாயகருக்கு இனிப்பு வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இந்த முந்தி விநாயகரை, கோவை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் தரிசித்து, வணங்கிச் செல்கின்றனர்.