திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளநிலையில், திருமலையில் பெருமாள் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, ஆலய பிரதான கோபுர முகப்புகளில் வண்ண மலர்கள், அலங்கார மின்விளக்கு தோரணங்கள் அமைப்பது, ஆலய மாட வீதிகள், ஆங்காங்கே பஜனை மண்டபங்கள் அலங்கரித்தல், மாட வீதிகளில் புதிதாக வண்ண வண்ண கோலங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருமலை பேருந்துகள் வரும் வழி மற்றும் பேருந்து செல்லும் வழித்தடங்கள் முதலியவற்றில், விஷ்ணு அவதாரங்கள் கொண்ட மின்விளக்கு தோரணங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ நாளில் வரும் பக்தர்கள் மனதைக் கவரும் வகையில், திருமலை அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.