திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது! நவ.13ல் சூரசம்ஹாரம்!

கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது.

03 July26 Thiruchandur

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவ.13ம் தேதி நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாவது படை வீடாகக் கொண்டாடப் படுவது திருச்செந்தூர். அலைவாய், சீரலைவாய் எனும் பெயர்களுக்கு ஏற்ப, அலைகள் தோன்றி மறையும் கடற்கரை ஓரத்தில் அமையப் பெற்றுள்ள அழகுக் கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியது.

இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி ஆறு நாள் சஷ்டி விரதத்தைத் தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கோயிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டனர்.

கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், ஐந்தரை மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளல் என்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.