அச்சன்கோவிலில் டிச.16ல் மண்டலோத்ஸவம் தொடக்கம்!

செங்கோட்டை: புகழ்பெற்ற அச்சன்கோவில் ஆலயத்தில் மண்டலோத்ஸவம் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ள ஐயப்பனின் படைவீடான அச்சன்கோவிலில் மண்டலோத்ஸவம் வரும் டிச.16ம் தேதி மாலை தொடங்குகிறது. தொடர்ந்து டிச.17ம் தேதி ஐயப்பனின் ஆபரணப் பெட்டி கொண்டுவரப் பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று கொடியேற்றம், நாராயணீயம் பாராயணம், வேத பாராயணம் ஆகியவை நடைபெறும்.

வரும் டிச.25ம் தேதி ரதோத்ஸவமும் அதற்கு மறு நாள் ஆராட்டு உத்ஸவமும் நடைபெறுகிறது.