திருச்சானூர் பிரமோத்ஸவம்; அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் புறப்பாடு!

திருப்பதி: பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம். அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்தார்.

திருச்சானூரில் நடைபெறும் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு பத்மாவதி தாயாரின் அன்ன வாகன சேவை திரு மாடவீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவில் இதில் உள்ள வாகன மண்டபத்தில் இருந்து சர்வ அலங்கார திருக்கோலத்தில் பத்மாவதி தாயார் தங்க அன்ன வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீப, தூப, நைவேத்தியங்களுக்கு பின்னர் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே திவ்ய பிரபந்த கோஷ்டி முன்செல்ல, நான்மறை வேதங்கள் பின்தொடர, பக்தர் அபிநயம் பிடித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய நிலையில் பத்மாவதி தாயாரின் அன்ன வாகன சேவை திரு மாடவீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி கொடுத்து தாயாரை வணங்கினர்.