மகரஜோதி தரிசனம்! பக்தர்கள் பரவசம்! சபரிமலையில் எதிரொலித்த சரணகோஷம்!

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். அந்த நேரம், சபரிமலையில் சரணகோஷம் எதிரொலித்தது!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகர விளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் திங்கள் கிழமை இன்று மாலை நடைபெற்றது.

முன்னதாக, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 6.20க்கு சன்னிதானம் வந்தது. சபரிமலை தந்திரி ராஜீவரரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் அரண்மனையில் இருந்து வந்த திருவாபரணங்கள், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப் பட்டன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

இதன் பின்னர், மாலை 6.35 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐய்ப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தரும் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என சரண கோஷம் முழங்க தரிசித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Donate to Dhinasari News!

Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.

@dhinasarinews/" rel="im-checkout" data-behaviour="remote" data-style="light" data-text="Donate Now">

To make an instant donation, click on the “Donate Now” button above. For information regarding donation via Bank Transfer/Cheque/DD, click here.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...