மார்ச் மாதம் நான்காம் தேதி சிவராத்திரி அன்று ராமேஸ்வரத்தில் இருந்து ராமராஜ்யம் ரதம் புறப்பட்டு ஏப்ரல் பதினான்காம் தேதி ஸ்ரீ ராம நவமி அன்று அயோத்தி சென்றடையும்.

மார்ச் எட்டாம் தேதியன்று திண்டிவனம் செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் வந்து சேருகிறது.

அன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் அருகிருந்து வரவேற்புக்குழுவானது வரவேற்று AM ஜெயின் காலேஜ், பக்தவத்சலம் நகர், மூவசரம் பேட்டை, எம்ஜிர் சாலை, சுதந்திரத்தின பூங்கா, ரோஜா மெடிக்கல்ஸ், வானுவம்பேட்டை வழியாக ஊர்வலமாக நங்கநல்லூர் கடந்து ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிராக அமைந்துள்ள ராணுவ மைதானத்திற்கு சுமார் எட்டு மணி அளவில் வந்து அடையும். அச்சமயம் அங்கு அயோத்தியில் ஶ்ரீராமனுக்கு ஆலயம் அமைத்திட வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெறும்.

மறுநாள் மார்ச் ஒன்பதாம் தேதி காலை ஏழு மணி அளவில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் துவங்கி அசோக்நகர் ஆஞ்சநேயர் ஆலயம் அம்பத்தூர் திருவள்ளுர் வழியாக புத்தூர் செல்ல உள்ளதால், விசுவ ஹிந்து பரிஷத் நடத்தும் இந்த ரதயாத்திரையில் இளைஞர்களும் பக்தர்களும் பொதுமக்களும் பெருவாரியாக வந்து ஶ்ரீராமபிரானின் அருள் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அயோத்தியில் ஆலயம், அதுவே நமது லட்சியம்!!

எனவே அயோத்தியில் ராமர் கோவில் சிறப்பாக அமைந்திட உங்களது பிரார்த்தனைகளையும் ஆதரவையும் வேண்டிக்கொள்கிறோம்.

ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் பஜ்ரங்கி. இந்து தர்மத்தைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம். http://www.ramarajyarathayatra.com/

ஸ்ரீ ராம ராஜ்ய ரத யாத்திரை 2019. சென்னை நங்கைநல்லூர் விஜயம். (Rama Rajya Rath Yatra, Chennai, Nanganallur)  மார்ச் எட்டு (March 8th 2019) அன்று, நேரம்: மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை நங்கைநல்லூர் சுற்றி ரத ஊர்வலம் (5pm to 8pm, Ram Rath Shobha Yatra in Nanganallur)

பொதுக்கூட்டம்: மாலை எட்டு மணி அளவில் ஆலந்தூர் மைதானம் (Public Meeting at Ground, opp to Aalandur Court Complex by 8pm)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...