நாளை ஒரு அபூர்வமான கிரக நிலை : 12-03-2019 கிடைத்தற்கரியது!

முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையும், முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகையும், முருகப் பெருமானுக்கு உகந்த திதி சஷ்டியும், பூமி வசிய நாளும் சேர்ந்து வரக்கூடிய மிக மிக அபூர்வமான கிரக நிலை  இன்று (12-03-2019).

சித்தர்கள் கூறிய அபூர்வமான பூமி வசிய நாள் – நாளை(மாசி 28; 12-03-2019 – செவ்வாய் கிழமை):

சித்தர்கள் கூறிய அபூர்வமான பூமி வசிய நாள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் மூன்றே நாட்கள் மட்டுமே!

அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே: மனை இல்லாதவர்களுக்கு சொந்த மனை அமைய ஒரு நல்ல வாய்ப்பு!

முனிவர்கள் வாக்கு: யார் யாருக்கு இந்த பூமியில் சொந்தமாக இடம் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் நல்ல இல்லம் கிடைக்கக்கூடிய சோதிட சாஸ்திர ஆதி சாஸ்திர விதிப்படி,

வசிஸ்டர் முனிவரும், கெளசிக முனிவரும் இணைந்து அவர்களால் சங்கல்பித்த ஒரு நிகழ்வுதான் பூமி வசிய நாள். செவ்வாய் கிழமைகளில் கிருத்திகை நட்சத்திரம், ஹஸ்தம், பரணி, ரோகிணி நட்சத்திரங்கள் வருகிறதோ அவ்விடத்தில் இருந்து கடக லக்னமாக வரும் நாட்கள் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே உண்டு.

அந்த 03 நாட்களில் பூமி வசிய நாள் என்று ஒரு 10 நிமிடம் உண்டு. அது…

  1. சித்திரை 18 ஆம் தேதி(01-05-2018) செவ்வாய்க்கிழமை – காலை 10:10 am முதல் காலை 10:20 am வரை(10 நிமிடங்கள்) (இந்நாள் 2018 இல் முடிந்தது).

  2. வைகாசி 01 ஆம் தேதி(15-05-2018) செவ்வாய்க்கிழமை. காலை 10:17am முதல் காலை 10:27am வரை(10 நிமிடங்கள்). (இந்நாள் 2018 இல் முடிந்தது).

  3. மாசி 28 ஆம் நாள்(12-03-2019) செவ்வாய்க்கிழமை. மாலை 04:27 pm முதல் 04:37 pm வரை. (இன்று).

இம்மூன்று நாட்களும் செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமே வரும். ஏனென்றால் சோதிடத்தில் செவ்வாய் கிரகம் பூமி மற்றும் மண்ணுக்குரியது. பிருகு முனிவரால் அருளப்பெற்ற யோக ஜாதக அமைப்பு இது.

வரும் மாசி மாதம் 28 ஆம் தேதி(12-03-2019) செவ்வாய்க்கிழமை மாலை 04:27 pm to 04:37 pm வரை உள்ள பத்து நிமிடத்தில் மட்டும் நல்ல மணலை எடுத்து முதலில் பூமியை வணங்கி, பின் பூமா தேவியையும் வணங்கி 10 நிமிட பூமி பயிற்சி செய்ய வேண்டும். பூமி பயிற்சி தெரிந்தவர் பூமி பயிற்சி செய்து கொள்ளலாம்.

தெரியாதவர்கள் நல்ல சிறு மணலை எடுத்து லிங்கத்தை போல் உருட்டி வைத்து பூசை செய்து அதை நைவேத்யமாக எடுத்து நாவிலே ஒரு சிட்டிகை சுவைத்து வசிக்க நல்ல இடம், சொந்த மனை அமைய வேண்டும் என்று பிராத்தனை செய்தால் நிச்சியமாக உங்களுக்கு மட்டுமல்ல ஏழு(07) தலைமுறைகளில் உங்களுக்கு நல்ல ஒரு பூமி ஸ்தானம் உங்களுக்கு கிடைக்கும்.

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீங்கள் வாழ முடியும். இது கெளசிக முனிவர் மற்றும் வசிஷ்டர் முனிவரின் வாக்கு. கெளசிக முனிவர் மற்றும் வசிஷ்டர் முனிவரால் அருளப்பெற்ற சோதிட வானசாத்திர ஆதிவிதிப்பிடி அமைந்த சூட்சுமமான கிரகநிலைகள் இது. இறைவனுக்கும் முனிவர்களுக்கும் மட்டுமே அறிந்த இரகசியமான பூமி வசிய நாள் இந்நாள்.

பிராப்தம்(பூர்வ புண்ணிய பலம்) உள்ளவர்களுக்கு மட்டுமே இதை நுகர முடியும், படிக்கவும் முடியும், பிராத்தனை செய்யவும் முடியும், பயிற்சி செய்யவும் முடியும்.

உலகிலுள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.  இது மிக மிக மறைமுகமான, கிடைத்தற்கரிய, அபூர்வமான சித்தர் வாக்கு. யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்..

– சித்தர் சீராம பார்ப்பனனார்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...