spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருவாரூர் ஆழித் தேர்... வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்! (தீபாராதனை வீடியோ)

திருவாரூர் ஆழித் தேர்… வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்! (தீபாராதனை வீடியோ)

- Advertisement -

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே  6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை!

தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும்.

முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. அப்போதெல்லாம் தேர் நிலைக்கு வர வாரக்கணக்காகுமாம்.

1988 ல் இந்து முன்னணியின் பெரும் முயற்ச்சியின் காரணமாக மக்கள் சக்தியும் இயந்திர சக்தியும் இணைந்து இழுக்கப்பட்டு வருவதால் அன்று மாலையே நிலைக்கு கொண்டு வரப்பட்டு விடுகிறது.

திருவாரூர் தேர் எனப்படும் ஆழித்தேரோட்டம் காலை 7 மணிக்குமேல் தேர் தியாகராஜருடன் பவனி வருகிறது. இதற்காக கடந்த 22ந்தேதியே மூலவர் தேரில் வந்து அமர்ந்து விட்டார். அன்றிலிருந்து கடந்த ஒரு வாரமாக தேர் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. இன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது .

ஏற்கனவே பல ஆயிரம் பக்தகோடிகள் திருவாரூர் தேரில் அமர்ந்துள்ள தியாகராஜரை தரிசித்து வந்துள்ள நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆழித்தேரை இழுக்க தயாராகி உள்ளனர்.

ஆழித்தேர் ஆருரா.. தியாகேசா .. முழக்கத்திற்கு நடுவில் அசைந்தாடி வருவது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. இந்த தேரின் நான்காவது நிலையில்தான் தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார்.
இந்த பீடம் மட்டுமே31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது.

மூங்கில்களை கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது, தேரின் உயரம் 96 அடியாக இருக்கும். ஆழித்தேரின் எடை 300 டன். இந்த தேரை அலங்கரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும், 3,000 மீட்டர் அளவுக்கு தேர் சீலைகளும் பயன்படுத்தப் படுகின்றன. தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.

காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும். தேரை அலங்கரிக்கும்போது,  500 கிலோ எடையுடைய துணிகள்,  50 டன் எடையுடை கயிறுகள்,  5 டன் பனமர கட்டைகளை பயன்படுத்தப் படுகிறது.

திருவாரூர் தேரின் முன்புறத்தில்  4 பெரிய வடக் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடக் கயிறு 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது.

ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடுகிறது. ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்த தேரின் சக்கரங்களை  இரும்பு பிளேட்டுகளின் மீது பசையை கொட்டி, இழுத்து திருப்புகின்றனர்.

பண்டைய காலங்களில் இந்த பிரம்மாண்ட தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப் பட்டனர். அதன்பின், ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர்.

தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் 4 புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது. முன்பு டிராக்டர்களில் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து, தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர்.

இதில், சில சமயங்களில் முட்டுக் கட்டை போடுபவர் விபத்தில் சிக்கும் ஆபத்து இருந்ததால், திருச்சியிலுள்ள பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு அதன்மூலமே தேர் நிறுத்தப்படுகிறது. ஒருமுறையாவது இந்தப் படத்தில் தேரின் அழகைக் கண்டு, இங்கிருந்தே சொல்வோம்…  தியாகேசா… ஆழித்தேர் அழகா…!

[videopress 9TkSZrgB]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe