October 21, 2021, 2:21 pm
More

  ARTICLE - SECTIONS

  ஐம்புலன்களும் ஆசையில் ஆடினால்.. ஆச்சார்யாளின் அருளுரை!

  abinav vidhya theerthar

  காட்டில் மானைப் பிடிக்க வேண்டுமென்றால் வேடுவர்கள் சங்கு ஊதுவார்கள் இதனை பார்த்ததும் மயங்கி நின்று விடும் அப்பொழுது அதை பயன்படுத்திக் கொண்டு வேடன் அம்பு விடுவான். ஓசையில் வைத்த பற்றின் காரணமாக மான் தனது வாழ்க்கையை இழக்க நேர்ந்தது.

  மனிதன் யானைகளைப் பிடித்து அடக்கி அவைகளை பல்வேறு வேலைகளுக்கு உபயோகப் படுத்துவதை நாம் பார்க்கிறோம். யானைகளை பிடிப்பதற்காக ஒரு குழியை வெட்டி அதில் இலை எல்லாம் போட்டு ஒன்றும் தெரியாதவாறு அதை மூடி வைப்பார்கள் பிறகு அந்த யானைக்கு ஆசை காட்டி அதனை அந்த குழியில் விழ செய்துவிடுவார்கள்.

  deer

  அதனை சங்கிலியால் கட்டி வைப்பர் ஆனாலும் அது அவர்களுக்கு கட்டுப்படாமல் இருக்கும் அதனை தம்முடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து அதற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு பழகிய ஒரு பெண் யானையை அதனிடம் அழைத்துச் செல்வார்கள் பெண் யானையானது ஆண் யானையை தொட்டுக் கொண்டிருக்கும் போது யானை சந்தோஷத்தில் திளைத்து தன்னை மறந்த நிலையில் இருக்கும் இப்படி தொடு உணர்வால் அது மயங்கி போகும்.

  பின்னர் அதற்கு பயிற்சி அளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த அந்த யானை இப்பொழுது சுதந்திரத்தை எல்லாம் இழந்து காலம் முழுவதும் அடிமை ஆனதற்கு காரணம் ஸ்பரிச சுகத்தில் மயங்கி பெண் யானையிடம் சிறிது நேரம் வைத்த உறவே ஆகும்.

  elephant

  விளக்கு ஏற்றி வைத்தால் அதன் ரூபத்தால் கவரப்பட்டு விட்டில் பூச்சிகள் வந்து விழும். அந்த ஒளியின் உள்ளே சென்று கருகி இறந்து விடும். ஒளியில் மயங்கி ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகள் தம் உயிரையே விடுகின்றன.

  மீன் பிடிப்பவர்கள் தூண்டிலில் உள்ள கொக்கியில் மண்புழுவை வைத்து தூண்டிலை வீசிகின்றனர்.புழுவால் ஈர்க்கப்பட்ட மீன் அதனை சாப்பிடுவதற்காக வாயை கொக்கியில் வைத்துவிடும் இப்பொழுது கூர்மையான பாகத்தில் மீன் மாட்டிக் கொண்டுவிடு.ம் கற்பனையான சுவையில் ஏற்பட்ட மயக்கத்தின் காரணமாக மீன் தன் உயிரையே இழக்க நேரிடும்.

  vittle putchi

  தாமரை மலரில் தேனை பருக ஆசைக் கொண்ட தேனீ அதன் உள்ளே சென்று குடிக்கும். மாலை பொழுது சாய்ந்து மெதுவாக இருள் சூழ ஆரம்பித்ததது தாமரை மலர்கள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டன. தேனீயோ பூவின் நறு மணத்தில் மயங்கி அதை விட்டு வெளியேறவில்லை விரைவில் தாமரை தன் இதழ்களை சுருக்கிக் கொள்ளும். பிறகு சூரியன் உதயம் ஆவான் விடியற்காலை தாமரை மலரும் அப்பொழுது வெளியே சென்று விடலாம் என்று நினைத்து தாமரை மலரின் உள்ளேயே இருந்து விட்டது தும்பி.

  fish

  அன்றிரவு யானை கூட்டம் எங்கிருந்தோ வந்து குளத்தில் இறங்கி துதிக்கையால் தாமரை மலரை பிடுங்கி வீசி எறிந்து குளத்தையே கலக்கிக் கொண்டிருந்தன. ஆனால் மலர்களில் சிறைப்பட்ட தேனி பரிதாபமாக இறந்தது தேனீயின் அழிவிற்கு காரணம் தாமரை மலரின் நறுமணம் மேலே வைத்த மோகம்.

  ஒவ்வொரு பிராணியும் தன் ஒவ்வொரு புலன்களின் வழியாக ஏற்படும் இன்பத்தின் மீது வைத்த மோகம் காரணமாக உயிரை இழக்க நேர்ந்தது

  thumbi

  ஐம்புலன்களின் மீதும் ஆசை வைத்திருக்கும் மனிதனின் மிக அருகில் இருக்கிறான் என்று தானே சொல்ல வேண்டும் இதனை மனதில் வைத்துக் கொண்டு ஒரு புலன்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப் பழக வேண்டும் இல்லாவிட்டால் கஷ்டங்களை தான் வரவேற்பான்

  பர்த்ருஹரி எனும் கவி எரிக்கும் சக்தி உள்ளது என்பதை அறியாததால் ஒரு பூச்சி விளக்கில் சென்று விழும். அறியாமையால் ஒரு மீன் தூண்டிலில் உள்ள புழுவிற்கு ஆசைப்பட்டு இறக்கிறது இசையால் கேட்கும் புலனில் உள்ள மோகம் மானை உயிரிழக்க செய்கிறது. ஒரு புலனால் இந்திரிய சுகங்களை கொடுக்கும் பொருட்களில் ஆசை வைத்தலே பெரும் துன்பங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று நாம் அறிந்து இருந்தும் அவற்றை திறப்பதற்கு அழைக்கிறோம் இந்த மோகத்தின் தாக்கம் அரிதாக இருக்கிறதே என்று வியந்து வருந்துகிறார்

  abinav vidhya theerthar

  அதனால் இந்தியங்களை நம் கட்டுக்குள் வைத்து மோகம் ஆசை ஆகியவற்றிற்கு அடிமைபடாமல் வாழ்க்கையை பயனுள்ள வகையில் பகவத் சிந்தனையிலும் கைங்கர்யங்களிலும் நாம் செலுத்தினோம் என்றால் சிறந்த பேறுதனை அடையலாம் என ஆச்சார்யார் அருள் உபதேசம் அருளுகிறார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-