திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் தினமும் பக்தர்கள் வருகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 5 கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
விடுமுறை தினம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் திருமலை தேவஸ்தானம் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து ள்ளது
