
நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நடை திறந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும் இந்த ஆண்டு இந்த நிறைவுத்தரிசி பூஜை விழா வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி கேரளா முழுவதும் நடத்த ஜோதிட பண்டிதர்கள் நாள் குறித்துள்ளனர்.

இதற்காக சபரிமலை கோவில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நடை திறக்கும் அன்று வேறு பூஜை ஏதும் நடைபெறாது ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலை கோவில் நடை திறந்ததும் ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும்.
இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை பகவான் ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும் இதற்காக செட்டிகுளங்கரா கோயில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்காக நெல் பயிரிடப்பட்டிருந்தது இந்த நெற்கதிர்கள் இன்று அறுவடை செய்யும் பணி பூஜை செய்து துவங்கியது.
அறுவடை செய்த நெற்கதிர்கள் திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டு இந்த நெற் கதிர்கள் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நெற்கதிர்கள் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் வைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பூஜைகள் நடத்தப்படுகிறது அன்று இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும் நாள் முழுவதும் நெய்யபிஷேகம் அஸ்டாபிஷேகம் உஜபூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
