
சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர்.
சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள் , முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாரணை நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில்
கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள் தம்பிராயன் சுவாமிகள் சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர் .முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.