தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கோவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்
நவராத்திரி விழாவை முன்னிட்டு செப்.26 முதல் அக். 5 வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அறிவித்துள்ளது.
புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் செப். 23 பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். இதனையடுத்து நவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக செப. 26 முதல் அக். 5 வரை மேலும் 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அறிவித்தது.
இதன்படி தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும் இரவில் கோயிலில் தங்க அனுமதி கிடையாதுவனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாங்களே உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.