ஒவ்வொரு மாதமும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக, வரும் 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் துவங்கி நடந்து வருகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து, விளக்கேற்றி தீபாராதனை நடத்தவுள்ளார். கோயில் நடை வரும் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
