
சபரிமலையில் மண்டல பூஜை நெருங்குவதால் சபரிமலையில் தினமும் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை பம்பை 24மணிநேரமும் பரபரப்பாக உள்ளது.இன்றும் இதுவரை 90620சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர்.டிச12 வரை கோவிலின் வருவாய் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே வரவேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி தினமும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இதையடுத்து பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தினமும் 90 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் கோவில் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டது. பக்தர்கள் 19 மணி நேரம் 18-ம் படி ஏறவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்காக பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வரை அவர்களை குழுக்களாக அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்து உள்ளது. அதன்படி கோவில் நடை திறந்த நாள் முதல் நேற்று முன்தினம் வரை கோவிலின் வருவாய் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது. இதில் அப்பம், அரவணை மூலமும் கோவிலுக்கு 70கோடி வருவாய் கிடைத்துள்ளது. மண்டல பூஜைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் கோவில் வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
