
உந்து மதகளிற்றன் …. சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்! எம்பெருமானார் உகந்த பாட்டு!
எம்பெருமானார் இந்தப் பாட்டை அனுசந்தித்துச் செல்லும் வேளையில் ஸ்ரீ பெரிய நம்பி திருவாசல் கதவை ஸ்ரீ பெரிய நம்பியின் குமாரத்தி அத்துழாய் திறக்க, எம்பெருமானார் அவளை நப்பின்னை என்று நினைத்து தண்டனிட, அவளும் திடுக்குற்று நம்பியிடம் விண்ணப்பிக்க, ஸ்ரீ பெரியநம்பி உந்துமத களிற்றன் அனுசந்தானமோ! என்றாராம்.
அதாவது எம்பெருமானாருக்கு இந்த உந்து மதகளிற்றன் என்ற பாசுரம் மிகவும் உகந்தது என்றபடி.
கதவைத் திறந்த போது இப்பாசுராத்தில் பாடப்பெற்ற நப்பின்னைப் பிராட்டி ஆகவே அவர் அப்படியே அதில் லயித்தார் என்கிறது.
ஸ்ரீ புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி, தன்னுடைய பதிப்பு குறிப்பில் ,இது திருக்கோட்டியூர் நம்பி தி0ருமாளிகையில், அவர் குமாரத்தி தேவகி பிராட்டி கதவு திறந்ததாகவும் தேவகி பிராட்டியை எம்பெருமானார் தண்டனிட்டதாகவும். வார்த்தாமாலை, ராமானுஜ திவ்ய சரிதை, வடிவழகிய நம்பி தாஸரின் குருபரம்பரா ப்ர்பாவம், போன்ற கிரந்தங்களில் இருப்பதால் அரும்பதத்தில் கொடுத்த அத்துழாயை எம்பெருமானார் தண்டனிட்டதாக இருப்பதை ஏற்பது கடினம் என்பது போல் தெரிவித்திருக்கிறார்.
எனினும் இது வேறு வேறு சமயத்தில் எம்பெருமானார் எம்பெருமானார் ஒரு முறை திருக்கோட்டியூர் நம்பி திருவாசலிலிம், ஒரு முறை ஸ்ரீ பெரிய நம்பி திருவாசலிலும் முறையே நப்பின்னை பிராட்டியாக பாவித்தாகக் கொள்ளலாம் .
- வானமாமலை பத்மநாபன்