தத்துவம் தகவன்று.. ஆறாயிரப்படி.
இங்கு பெருமாள் சரணாகத ரக்ஷகன் என்பதை தெரிவிக்கும் விதமாக ஆறாயிரப்படியில் ஒரு நிக்ழ்வு கோடிக்குக் காட்டப்படுகிறது. கபோதஸ்தானீயனாகில் என்று.
ஸ்ரீ விபீஷணாழ்வான் பெருமாள சரணம் புக வந்தபோது சுக்ரீவ மஹாராஜா அதை ஆட்சேபிக்க, ஒரு பறவையால் செய்ய முடிந்ததை தான் செய்யவில்லையே என்று பெருமாள் வருத்தமுற்றாராம். அந்தப் பறவை விருத்தாந்தத்தை அங்கு பெருமாள் சுக்ரீவனுக்கு தெரிவிக்கிறார்!
அதாவது ஒரு வேடன் கபோதம் என்னும் பெண் பறவையை பிடிக்க, அவனும் குளிரில் நடுங்கி மரத்தின் கீழே ஒதுங்க, அந்த ஆண் பறவை தன்னுடைய பெண் பறவையைப் பிடித்தாலும் தன் மரத்திற்கு கீழே ஒதுங்கியதால் அவனை ரக்ஷிக்க வேண்டும் என்று பெண் பறவை புருஷாகாரத்தின் பேரில் அது தன்னை மாய்த்துக் கொண்டு அவனுக்கு இரையானது.
இப்படி ஒரு பறவையால் செய்ய முடிந்ததை கூடத் தன்னால் செய்ய முடியவில்லையே ( அதாவது அடியார்களால் இந்த வானர சேனைக்குக் கட்டுண்டிருக்கும் நீர்மை குணத்தால்) என்று பெருமாளின் இந்த கல்யாண குணத்தை நினைத்து ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நமக்கு தஞ்சமாக இதை நினைத்துக் கொள்ளும் படி அருளிச் செய்த வார்த்தை ஈட்டில் 6 8.6 காணலாம்! இந்த விருத்தாந்தம் நேரடியாக ஆறாயிரப்படி இல்லை. வ்யாக்கியானத்துக்கு இயைப இந்த நிகழ்வு நினைக்கத்தக்கது.
குறிப்பு: இந்த விருத்தாந்தத்தை நமக்கு நினைவு கூர்ந்து உபஹரித்த ஸ்ரீ ஸ்ரீரங்கம் தேவராஜன் ஸ்வாமிக்கு நம் க்ருதஞ்யதைகள்
- வானமாமலை பத்மநாபன்