- Ads -
Home ஆன்மிகம் திருப்பாவை திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 21

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 21

thiruppavai pasauram 21

வள்ளல் பெரும் பசுக்கள் .. ஆறாயிரப்படி

உதார : சந்தர்ஸயன் என்றார் ஆளவந்தார். அதாவது இந்த பசுக்கள் பாலை கொடுக்கும்போது மற்றவர்களுக்கு உதவுவதாக நினைத்து கொடுப்பதில்லை. மாறாக தங்களுக்கு பேறாக கொடுக்கின்றன என்றபடி. ஒரு ப்ரதி-உபகாரம் எதிர்நோக்கி கொடுப்பதில்லை. தங்களுக்கு அது ஒரு பேறாகக் கருதிக் கொடுக்கின்றன என்றபடி (உதார ஸ்வபாவமா யிருக்கை).

ஆசாரியர்கள் ரகசியங்களை எல்லோருக்கும் கொடுத்தால் அல்லது தரிக்கமாட்டார்கள். விளங்கிய மேகத்தை ( இராமானுச நூற்றந்தாதி-26) என்ற பதம் இங்கு நோக்கத்தக்கது.

ஆசார்ய ஹ்ருதயத்தில் மேகத்துக்கு (மேகம் பருகின ஸமுத்ர … ஆ. ஹ்ரு 72) உட்பொருள் சொல்லுகையில், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “மேகம் வர்ஷிப்பது அதன் ஸ்வபாவம்”. அதனுடைய வள்ளல்தனம். எதையும் எதிர்பார்த்து வர்ஷிப்பதில்லை.

அதேபோல் ஆசார்யர்கள் அர்த்தங்களை கொடுத்தல்லது தரியார்கள், என்றபடி. இங்கு ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினம்-4, உதார: என்று, பராசர மகரிஷி தத்வார்த்தங்களை நமக்கு கொடுத்ததற்கு உதார: என்று கொண்டாடுகிறார் பரமாச்சாரியார் ஸ்ரீ ஆளவந்தார்.

ALSO READ:  ஹைந்தவ சங்கராவம்: சனாதன தர்ம மீட்பின் விடிவெள்ளி!

திருவாய்ப்பாடியில் உள்ள பசுக்களும் இத்தன்மை கொண்டது என்பது இங்கு திருவுள்ளம்.

  • வானமாமலை பத்மனாபன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version